பி.எப். பணம்.. மாத சம்பளதாரர்களே... இனி யுஏஎன் நம்பருக்காக நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை
Recommended Video
டெல்லி: பி.எப்.பில் பணம் எடுக்க யுஏஎன் நம்பருக்காக நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்க தேவையில்லை, இனி நீங்களே உங்கள் யுஏஎண் நம்பரை ஜெனரேட் செய்து கொள்ளலாம்.இதற்கான வசதி EPFO இணையதளத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் பி.எப். கணக்கில் விழும் பணம் தான் அவர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்பு ஆகும். வேலையில்லாத சூழல்களில் பிஎப் பணம் தான் கைகொடுக்கும். ஒய்வு காலத்திலும் இந்த பணம் கைகொடுக்கும்.
மாத சம்பளம் வாங்கும் பணியாளர் ஒருவருக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து (இபிஎப்ஒ) யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும்.

பிஎப் நம்பர் மாறும்
அவர் எத்தனை நிறுவனம் மாறிலும் பி.எப். அக்கவுண்ட் மாறும். ஆனால் அவரது ஓய்வு காலம் வரை யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் மாறாது. தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண் யுஏஎன் அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த நம்பர் தான் அவரது பணி ஓய்வு காலம் EPFO இணையதளத்தில் பராமரிக்கப்படும்.

நிறுவனம் தேவையிலை
இந்த சூழலில் தற்போது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யுனிவர்சல் நம்பர் (யுஏஎன்) பெற வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தில் விண்ணபித்து தான் பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இனி யாரும் நிறுவனத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை. அவர்களே EPFO இணையதளத்தில் அவர்களின் UAN நம்பரை ஜெனரேட் செய்து கொள்ள முடியும்.

ஆவணங்கள் பதிவிறக்கம்
இந்த வசதி தவிர, இன்னொரு வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ) தனது 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஈ-இன்ஸ்பெக்ஷன்
மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தொழிலாளர் நல அமைப்பின் 67 வது அறக்கட்டளை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மேற்கண்ட இரண்டு வசதிகளையும் தொடங்கினார். அவர் ஈ-இன்ஸ்பெக்ஷன் வசதியையும் தொடங்கினார், இது நிறுவன முதலாளிகளுடன் EPFO இன் டிஜிட்டல் இடை முக வசதியாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications