என் மனது புண்பட்டுவிட்டது.. மறந்து விட்டு கடந்து செல்கிறேன்..காங் கூட்டத்தில் உருக்கமாக பேசிய சோனியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தனது மனது புண்பட்டுவிட்டதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.

Recommended Video

    Sonia Gandhi's emotional speech st CWC meet

    அடுத்தடுத்து திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், காங்கிரசின் இடைகால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த தலைவரை 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். விரைந்து காரிய கமிட்டி கூட்டங்களை நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

    மிகவும் உருக்கம்

    மிகவும் உருக்கம்

    இந்த கூட்டத்தில் சோனியா காந்தி மிகவும் உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது. எனது மனது புண்பட்டுவிட்டது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இப்படி கடிதம் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சக உறுப்பினர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எதிர்ப்புகளை , கசப்புகளை மறந்து சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    சக உறுப்பினர்கள்

    சக உறுப்பினர்கள்

    சில விஷயங்களை மறந்துவிட்டு முன்னோக்கி செல்ல வேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது. தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியது தவறு என்று கூறி நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்கள் சக நண்பர்கள், உறுப்பினர்கள். அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கும் திட்டம் இல்லை, என்று சோனியா காந்தி உருக்கமாக பேசி இருக்கிறார்.

    தலைவர் பதவி

    தலைவர் பதவி

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் வகிக்க முடியாது என்பதில், சோனியா மிகவும் உறுதியாக இருந்துள்ளார். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவிடம் நேரடியாக இது தொடர்பாக வேண்டுகோள் வைத்துள்ளார். இதை தொடர்ந்தே, தலைவர் பொறுப்பில் நீடிக்க சோனியா ஒப்புக்கொண்டு உள்ளார். இன்னும் சில மூத்த தலைவர்களும் சோனியாவிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

    எதிர்ப்பு கடிதம்

    எதிர்ப்பு கடிதம்

    முன்னதாக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நேற்று மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விகளுக்கு கட்சியின் தலைமையும் காரணம். கட்சியின் தலைமை துடிப்பாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குள் நிர்வாக ரீதியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை தொடர்ந்தே இன்று காரிய கமிட்டி கூட்டம் நடந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+