ஜார்ஜ் சாரோஸ்.. 92 வயது முதியவர் கருத்தால் கவிழும் அளவுக்கா மோடி அரசு இருக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி
ஜார்ஜ் சோரஸின் கருத்தானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசை கவிழ்க்கும் முயற்சி என சில வாதிடுகிறார்கள். அவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.
டெல்லி: அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சம்பந்தப்படுத்தி அவதூறு கருத்துகளைக் கூறிய அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் பற்றிய கேள்விகளுக்கு நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்.
ஒரு 92 வயது நபர் தெரிவித்த கருத்தால், கவிழ்ந்துவிடக் கூடிய அளவில்தான் மோடி அரசு இருக்கிறதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஜார்ஜ் சோரஸ் இதற்கு முன்பு பல முறை தெரிவித்த கருத்துகளும், இப்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளும் ஏற்புடையதல்ல என்றும் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

மோடியை குறிவைத்து தாக்குதல்
இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி, பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்தது. இந்தியாவில் பெரும் புயலைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இணைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில், ஹங்கேரிய - அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, அதானியால் இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல், இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், இந்த பிரச்சினைக்குப் பிரதமர் மோடி பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார். அதானி வீழ்ச்சியால், மோடி அரசுக்கு வீழ்ச்சி என்பது இவரது கருத்தின் சாராம்சமாகும்.

பாஜக, காங்கிரஸ் பதிலடி
இதனிடையே, தான் தெரிவித்த கருத்தை முன்வைத்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மோடியைக் கடுமையாக விமர்சிக்கும் என்று எதிர்பார்த்தே ஜார்ஜ் சோரஸ் இவ்வாறு பேசினார். ஆனால் இங்கு நடந்ததோ அப்படியே தலைகீழ். இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிட அந்நியர்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் பாஜக மட்டுமின்றி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஜார்ஜ் சோரஸின் கருத்தை நிராகரித்துள்ளது.

"பொருளாதாரக் குற்றவாளி"
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜார்ஜ் சோரஸை கடுமையாக விமர்சித்தார். பிரிட்டனால் பொருளாதார போர்க் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். மேலும், ஒவ்வொரு நாட்டிலும் தங்களுக்குச் சாதகமான அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜார்ஜ் சோரஸ் போன்ற தீய சக்திகள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

ப. சிதம்பரம் விமர்சனம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "ஜார்ஜ் சாரோஸ் இதற்கு முன்பும் பல விவகாரங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அவற்றுடனும் நான் உடன்பட்டது கிடையாது. அதேபோல, இப்போது அவர் கூறிய கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

"சிறுபிள்ளைத்தனமானது"
ஆனால், ஜார்ஜ் சோரஸின் கருத்தானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசைக் கவிழ்க்கும் முயற்சி என சில வாதிடுகிறார்கள். அவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. இந்திய அரசாங்கத்தில் யார் இருக்க வேண்டும்.. யார் இருக்கக் கூடாது என்பதை இந்திய மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்நியர்களுக்கு இதில் வேலை கிடையாது. ஒரு 92 வயது பணக்காரர் கூறும் கருத்தால் கவிழ்ந்துவிடும் நிலையிலா மோடி அரசு இருக்கிறது? எனக்கு தெரியவில்லை என ப. சிதம்பரம் கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications