அரசியலில் குதித்த பிரியங்கா காந்தி.. ராகுல் காந்தி என்ன ரியாக்சன் கொடுத்தார் தெரியுமா?
பிரியங்கா காந்தி தன்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பிரியங்கா காந்தி தன்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு எப்படி எதிர்வினையாற்ற போகிறார் என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

ராகுல் சந்தோசம்
ராகுல் காந்தி தனது பேட்டியில், நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறேன். பிரியங்கா காந்தி என்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா மிகுந்த வலிமையான தலைவர். பாஜக இப்போது பெரிய பயத்தில் இருக்கிறது.

பிரியங்கா காந்தி வருகை
பிரியங்கா காந்தியும், ஜோதிராதித்ய சிந்தியாவும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் வலுவான தலைவர்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் உத்தர பிரதேச அரசியலை மாற்ற வேண்டும்.தேர்தலில் போட்டியிடுவது பிரியங்காவின் விருப்பம்.

பாஜக போட்டி
எங்களுக்கு மாயாவதி மீதோ, நண்பர் அகிலேஷ் யாதவ் மீதோ எந்த வருத்தமும், கோபமும் இல்லை. எங்களுக்கு இடையில் நல்ல நட்பு இருக்கிறது. நான் அவர்களை மிகவும் மதிக்கிறேன். அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில், அவர்களுக்கு உதவ நாங்கள் தயார்.

புது வியூகம்
எங்களுடைய ஒரே குறிக்கோள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே. எங்கள் மூன்று கட்சிகளின் குறிக்கோளும் அதுதான். அதேபோல் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கையையும் காப்பாற்ற வேண்டும். தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் வியூகம் புரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications