Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டை அடகு வைத்த நடிகை கங்கனா ரனாவத்.. ‛எமர்ஜென்சி’ திரைப்படத்தால் வந்த சோதனை! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் எமர்ஜென்சி திரைப்படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது வீட்டை அடகு வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்பியாக உள்ளார். கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்த கங்கனா ரனாவத் தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

kangana ranaut emergency cinima

நடிகை கங்கனா ரனாவத் இந்துத்துவா அமைப்பினருக்கு ஆதரவாகவும், பாஜக தலைவர்களுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் அவர் பாஜகவில் சேரலாம் என்ற தகவல் பரவியது. அதன்படியே அவர் பாஜகவில் சேர்ந்து எம்பியாகி உள்ளார்.

முன்னதாக நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமரான காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் அமல்படுத்திய ‛எமர்ஜென்சி'யை அடிப்படையாக வைத்து படம் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் இந்திரா காந்தியாக, கங்கனா ரனாவத்தே நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் வந்தது. அதேபோல் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினரை போல் சீக்கிய அமைப்பை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் என்பது ஏற்பட்டு வந்தது. இறுதியாக அனைத்து பிரச்சனைகளையும் கடந்த 17 ம் தேதி திரையரங்குகளில் ‛எமர்ஜென்சி' திரைப்படம் வெளியிடப்பட்டது.

தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் ‛எமர்ஜென்சி' திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் தான் எமர்ஜென்சி திரைப்படத்தால் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி நடிகை கங்கனா ரனாவத் இண்டர்வியூ ஒன்றில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ‛எமர்ஜென்சி' திரைப்படத்துக்காக தனது வீட்டை அடகு வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கங்கனா ரனாவத் கூறியதாவது:

எமர்ஜென்சி திரைப்படத்தை உருவாக்க நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன். இந்த திரைப்படத்தில் இருந்து நிறையபேர் பின்வாங்கினர். திரைப்படத்தை வாங்க மறுத்தனர். ஓடிடி தளங்களும் கூட இந்த திரைப்படத்தை வாங்க தயாராக இல்லை. இந்த திரைப்படம் எடுக்க என் வீட்டை அடமானம் வைக்க வேண்டியிருந்தது. இந்த பிரச்சனைகளுக்கு நடுவே தான் இந்த திரைப்படம் உருவானது.

இதை சொல்லி அழுவதற்கு என்று எனக்கு யாரும் இல்லை. என்னை விளம்பரப்படுத்தும் வகையில் நான் பிஆர் குழுவை வைத்து கொண்டது இல்லை. ஆனால் எனக்கு எதிராக இருப்பவர்கள் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக தனியே பிஆர் டீமை களமிறக்கி இருந்தனர். அவர்கள் எனக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்தனர். சைக்கோ உள்பட பல வார்த்தைகளை கூறி விமர்சனம் செய்தனர். என்னை பற்றி ரொம்ப தவறான கருத்துகளை பேசினர். இந்த கருத்துகள் என்பது ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு மோசமாக யாரும் பேசமாட்டார்கள் என்ற அளவில் இருந்தது'' என்று கூறியுள்ளார்.

இந்த எமர்ஜென்சி திரைப்படத்துக்கு ரிதிஷ் ஷா திரைக்கதை எழுதியுள்ளார். கங்கனா ரனாவத் இயக்கி இந்திரா காந்தியாக நடித்துள்ளார். அதோடு படத்தை கங்கனா ரனாவத், ஜி ஸ்டூடியோஸ் மற்றுமு் ரேனு பிட்டி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற முறையில் நிதி நெருக்கடியின்போது தனது வீட்டை அடகு வைத்ததாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+