டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொந்த தடுப்பூசி உற்பத்தி செய்து மகத்தான சாதனை.. 130 கோடி மக்களுக்கும் நன்றி.. பிரதமர் மோடி பெருமிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்த தேசம் என்ற நிலை மாறிவிட்டது, சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் நாடு என்ற நிலை உருவாகி இருப்பது பெருமையாக இருக்கிறது என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

100 கோடி டோஸ்கள் கொரோனா வேக்சின் போட்டு இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. உலக அளவில் 100 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜனவரி 16ம் தேதி தொடங்கிய இந்த வேக்சின் விநியோகம் இன்று பெரிய மைல்களை எட்டியுள்ளது.

9 மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு.. இன்று மறைமுக தேர்தல்.. பதவிகளை மொத்தமாக அள்ளும் திமுக! 9 மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு.. இன்று மறைமுக தேர்தல்.. பதவிகளை மொத்தமாக அள்ளும் திமுக!

இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி நேற்று டிவிட்டரில் மகிழ்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

மோடி ட்வீட்

மோடி ட்வீட்

அதில் இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்த சாதனையை வெற்றிகரமாக முடித்ததற்காக நான் மக்களிடம் நன்றி தெரிவிக்கிறேன். நாம் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. நாட்டின் 130 கோடி மக்களுக்கும் இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் என்று இந்த வேக்சின் பணிகளுக்காக உழைத்த உங்கள் எல்லோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டு மக்களிடம் உரை

நாட்டு மக்களிடம் உரை

இதையடுத்து இன்று நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனா வேக்சினை மக்களிடம் கொண்டு செல்வதில் கோவின் பக்கம் சிறப்பு பங்கு வகித்தது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்தது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் மக்களுக்கு எளிதாக கிடைத்தது. கொரோனா காலத்தில் துவண்டு விடாமல் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம்.

நமது வேக்சின்

நமது வேக்சின்

நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் பாதுகாப்பானது. நமது வேக்சின் தயாரிப்புகள் இப்போதும், இனி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். கொரோனா பெருந்தொற்று யார் மீதும் பாகுபாடு காட்டாத போது, தடுப்பூசியில் எப்படி பாகுபாடு காட்ட முடியும்? எந்த வேறுபாடும் இன்றி எல்லோருக்கும் வேக்சின் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு பணி

தடுப்பு பணி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்து, ஒருமித்த தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்டோரில் 30% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு விட்டது. பண்டிகை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பண்டிகை நாட்களை மக்கள் மிக மிக கவனமாக கொண்டாட வேண்டும்.

பண்டிகை

பண்டிகை

காலணி அணிந்து கொண்டு வெளியே செல்வதைப் போல, முகக்கவசம் அணிவதையும் பழகிக்கொள்ள வேண்டும். வரும் தீபாவளி நமக்கு சிறப்பானதாக அமையும். இதுவரை ஒரு டோஸ் வேக்சின் கூட எடுக்காதவர்கள் உடனடியாக வேக்சின் எடுக்க வேண்டும். உடனடியாக வேக்சின் பெற முயற்சிக்க வேண்டும். அதேபோல் இரண்டு டோஸ் எடுத்தவர்கள் மற்றவர்களை வேக்சின் எடுக்க அறிவுறுத்த வேண்டும். வரலாற்று சாதனை படைக்க உதவிய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
I thank 130 crore Indians for successful vaccination in the country says PM Modi in his speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X