சிறையில் தள்ளினாலும் பயப்பட மாட்டேன்.. ராகுல் காந்தி அதிரடி பிரஸ்மீட்
டெல்லி: ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. கேள்வி கேட்பதை நான் நிறுத்த மாட்டேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். எந்த வகையிலும் நான் இந்திய அரசுக்கு எதிராக செயல்படவில்லை என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ராகுல் மீது அவதூறு வழக்கு
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

குற்றவாளி என்று தீர்ப்பு
சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தந்து. இந்த நிலையில், சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் தீர்ப்பளித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

ராகுல் காந்தி பிரஸ்மீட்
மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்த வழக்கில் இரண்டுஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் முறையாக செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயப்பட மாட்டேன்
ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடனே வைத்து வருகிறேன். ஜனநாயகம் குறித்து பேசும் பாஜக மக்களவையில் பேச அனுமதிப்பது இல்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. தேசத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்பேன். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். மோடி - அதானி உறவு குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்த போவது இல்லை. தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன்.

சிறையில் அடைத்தாலும்..
பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும்.. சிறையில் அடைத்தாலும்.. அஞ்ச மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications