டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியான ஏர்போர்ஸ்? இந்திய வான் எல்லையில் பறந்த.. ஈரான் விமானத்திற்கு நடுவானில் மிரட்டலா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரானில் இருந்து சீனாவிற்கு செல்ல வேண்டிய விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த விமானம் இந்திய வனப்பகுதியில் செல்லும் போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டது. இது தொடர்பாக இந்திய விமானப்படை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இந்த விமானம் சீனாவின் குகான்சூ நோக்கி சென்று கொண்டு இருந்தது. IRM081 விமானம் ஆகும் இது.

இந்த விமானம் சீனாவை நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில் நடுவானில் விமானத்திற்கு உள்ளே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. .

காரைக்கால் FM -குறைந்த “தமிழ்”.. திணிக்கப்பட்ட “இந்தி”! மத்திய அரசின் வேலையே இதான் -கொதித்த ராமதாஸ் காரைக்கால் FM -குறைந்த “தமிழ்”.. திணிக்கப்பட்ட “இந்தி”! மத்திய அரசின் வேலையே இதான் -கொதித்த ராமதாஸ்

மிரட்டல்

மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட உடனே விமானத்தை விமானிகள் தரையிறக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. அப்போது விமானம் டெல்லிக்கு அருகில் இருந்துள்ளது. ஈரான் - சீனா ரூட் என்பது இந்தியா வழியாக செல்ல வேண்டிய ரூட் ஆகும். இதன் காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து.. விமானத்தை தரையிறக்க கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதன்பின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளனர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் அதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த மிரட்டல் இந்திய வான் எல்லை பகுதியில் நடந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே பதற்றம் ஏற்பட்டது.

விமானம்

விமானம்

இதையடுத்து அந்த விமானம் தரையிறங்காமல் சீனா நோக்கி சென்றதாக ஊடகங்கள் பல செய்திகள் வெளியிட்டன. விமானங்களை டிராக் செய்யும் கருவிகள் உதவியுடன் இதற்கான டிராக்கிங் இமேஜ்களையும் வெளியிட்டனர். அதாவது விமானம் செல்லும் திசையை வெளியிட்டு இருந்தனர். இந்த சம்பவம் காரணமாக இந்திய விமானப்படை தயார் நிலையில் இருந்ததாகவும் பல ஊடகங்கள் உறுதிப்படுத்தாத செய்திகளை வெளியிட்டன.

மறுப்பு

மறுப்பு

இது தொடர்பாக இந்திய விமானப்படை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், எங்களுக்கு இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதையடுத்து விமானத்தை டெல்லியில் தரையிறக்க அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு தொழில்நுட்ப காரணங்களால் அனுமதி தர முடியவில்லை. நாங்கள் ஜெய்ப்பூர், அல்லது சண்டிகரில் தரையிறங்கும்படி கூறினோம். ஆனால் விமானிகள் சீனாவிலேயே இறங்கிக்கொள்வதாக முடிவை மாற்றிக்கொண்டனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. காலை 9.20 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
IAF denies the reports of safety issues for Iran flight bound to China in Indian air space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X