Breaking News Live: இழுத்தடிப்புக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் வீர மகன் அபிநந்தன் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. Delhi
oi-Arivalagan ST
Updated: Friday, March 1, 2019, 21:32 [IST]
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முதல் நாள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார். அதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார். அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில் உரிய மரியாதையுடன் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகா எல்லையில், ஆர்.ஜி.கே.கபூர் செய்தியாளர்கள் சந்திப்பு
சற்று முன்பாக அபிநந்தன் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்
அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது- கபூர் பேட்டி
வாகா எல்லையை கடந்து இந்தியா வந்தார் அபிநந்தன்
தீவிர இழுபறிக்கு பிறகு இரவு 9.20 மணிக்கு இந்திய எல்லைக்குள் வந்தார் அபிநந்தன்
அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க காலம் தாழ்த்தும் பாகிஸ்தான்
வாகா எல்லையில் 2 முறை நேரத்தை மாற்றியுள்ளது பாகிஸ்தான்
பாகிஸ்தான் தாமதத்தால் வாகா எல்லையில் பரபரப்பு
வாகா எல்லையில் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை
பரிசோதனைகள் தொடருவதால் டெல்லி செல்வதில் தாமதம்
விங் கமாண்டர் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
தாயகம் திரும்பினார் அபிநந்தன்
ஜாமர் வாகனங்கள் புடை சூழ பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் அழைத்து வரப்படுகிறார்
அபிநந்தன் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கை
விண்ணைப் பிளக்கும் வரவேற்பு கோஷம்.. இந்திய எல்லையை நெருங்குகிறார் அபிநந்தன்
சற்று நேரத்தில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட உள்ளார்
லாகூரிலிருந்து கார் மூலம் வாகா எல்லைக்கு வந்தார் அபிநந்தன்
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்
மாலை 3 முதல் 4 மணிக்குள் வாகா எல்லைக்கு அழைத்து வரப்படுவார் என தகவல்
வாகா எல்லையில் விமானி அபிநந்தனை வரவேற்க மக்கள் குவிகிறார்கள்
திருவிழா கூட்டம் போல வாகா எல்லையில் மக்கள் கூடுகிறார்கள்
அபிநந்தன் இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட உள்ளார்
அபிநந்தன் வருகை காரணமாக பாதுகாப்பு அதிகரிப்பு
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அபிநந்தன் பெற்றோருக்கு பிரமாண்ட வரவேற்பு
இந்திய விமானி அபிநந்தனை சந்திக்க டெல்லி சென்றனர் அவரின் பெற்றோர்
இந்திய விமானி அபிநந்தன் இன்று பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படுகிறார்
இன்று மதியம் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் - தீவிரவாதிகள் இடையே மோதல்
குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல்
இந்தியா - பாக். போர் பதற்றம் தணிந்துள்ள வேளையில் தாக்குதல்
இந்திய ராணுவமும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகிறது
சண்டை காரணமாக எல்லையில் பதற்றம்
இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் இந்திய விமானி அபிநந்தன்
பாகிஸ்தானில் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்
நல்லெண்ண அடிப்படையில் பாக். அரசு அபிநந்தனை விடுவிக்கிறது
அபிநந்தனை இன்று விடுவிக்க போவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்
அபிநந்தன் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்
இந்திய கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
கடலுக்கு மேலும், கடலுக்கு அடியிலும் இந்திய கடற்படை தயாராக உள்ளது
கடல் வழியாக பாகிஸ்தான் எந்த தாக்குதல் நடத்தினாலும் பதிலடி தரப்படும்- முப்படை
முப்படைகளும் இந்திய மக்களை பாதுகாக்க முழு வீச்சில் தயாராக உள்ளது
இந்திய ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது- முப்படைகள்
பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம்
அமைதி மற்றும் நிலைத்தன்மையே இந்திய ராணுவத்தின் விருப்பம்
எப் 16 போர் விமானத்திலிருந்து 2 விமானிகள் பாரசூட்டிலிருந்து குதித்தனர்
நேற்று மாலையில்தான் 1 விமானி மட்டுமே தங்களிடம் இருந்ததாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது
பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது
ரஜோரி கிழக்கு பகுதியில், எப் 16 விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகணை மீட்கப்பட்டது
இந்திய விமானப்படை எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது
விங் கமாண்டர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளதற்கு வரவேற்கிறோம்
27ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்திய வான் எல்லையை கடந்து வந்தன- முப்படை தகவல்
ரஜோரி பகுதியில் எல்லையை கடந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன
மிக் 21 பைசன், மிராஜ் 2000 உள்ளிட்ட இந்திய விமானங்கள் அவற்றை வழி மறித்தன
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கின
பாகிஸ்தான் விமானப்படையால் எந்த சேதத்தையும் விளைவிக்க முடியவில்லை
பாகிஸ்தானின் எப் 16 விமானம், மிக் 21 பைசன் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் மாயமானது
இந்திய விமானி பாராசூட்டில் பாக் எல்லைக்குள் குதித்தபோது அந்த நாட்டு ராணுவத்தால் பிடிபட்டார்
முப்படை தளபதிகள் பிரஸ் மீட் ஆரம்பித்தது
வாகா எல்லையில் நாளை பிற்பகலில் ஒப்படைக்கப்படுகிறார் அபிநந்தன்
டெல்லியில் முப்படை தளபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
முப்படை தளபதிகள் மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
அபிநந்தன் விடுவிக்கப்படவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு இரவு 7 மணிக்கு ஒத்திவைப்பு
பாகிஸ்தானின் அமைதியை மற்ற நாடுகள் கோழைத்தனமாக நினைக்க கூடாது - இம்ரான் கான்
நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம் - இம்ரான் கான்
எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் - இம்ரான் கான்
இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன் - இம்ரான் கான்
இந்தியாவின் அரசின் செயல்கள் அங்கு பலருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும் - இம்ரான் கான்
இந்திய அரசின் சில செயல்பாட்டில் குற்றம் இருப்பதை இந்தியர்கள் புரிந்துகொள்வார்கள் - இம்ரான் கான்
நான் நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன் - இம்ரான் கான்
இந்தியா - பாக் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று அவரிடம் பேசினேன்- இம்ரான் கான்
பாகிஸ்தானுக்கு எப்போதும் அமைதிதான் முக்கியம் - இம்ரான் கான்
பாகிஸ்தானில் மிக ஒழுக்கமாக செயல்பட்ட ஊடகங்களுக்கு நன்றி - இம்ரான் கான்
புல்வாமா தாக்குதல் போன்ற மோசமான தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா? - இம்ரான் கான்
புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முன்பே ஆதாரங்களை அளித்து இருக்கலாம்
முன்பே அப்படி செய்திருந்தால் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது - இம்ரான் கான்
இந்தியாவின் கோபத்திலும், தாக்குதலிலும் கூட பாக். ஒற்றுமையாக இருந்தது - இம்ரான் கான்
போரிலும் சண்டையிலும் செலவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை - இம்ரான் கான்
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கே செலவு செய்ய எனக்கு விருப்பம் - இம்ரான் கான்
அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் - இம்ரான் கான் அறிவிப்பு
அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது- இந்தியா முடிவு
இந்திய பைலட் அபிநந்தன் பத்திரமாக திரும்ப வேண்டும்- இந்திய வெளியுறவுத்துறை
இந்திய பைலட்டுக்கு எந்த மாதிரி பாதிப்பு ஏற்பட்டாலும் பொறுக்க மாட்டோம்- இந்தியா எச்சரிக்கை
READ MORE
இந்திய போர் விமானம் பாகிஸ்தானில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது
பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது - இந்திய ராணுவம்
காலை 3.30 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது - இந்திய ராணுவம்
பாக். எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினோம் - இந்திய ராணுவம்
1000 கிலோ எடைகொண்ட வெடிப்பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தினோம் - இந்திய ராணுவம்
ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை வைத்து இந்தியா அதிரடி தாக்குதல்
12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன
1000 கிலோ வெடி பொருட்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியின் நெடுகிலும் உள்ள முகாம்கள் அழிக்கப்பட்டன
அனைத்து தீவிரவாத முகாம்களும், பங்கர்களும் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் தரப்பில் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்தியா தகவல்
பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை
ராணுவ அதிகாரிகளுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை
பாக். மீது இந்தியா தாக்கியதை அடுத்து அவசர ஆலோசனை
பாகிஸ்தானின் திடீர் ஆலோசனை காரணமாக பதற்றம்
சபாஷ்.. பலே.. இந்திய ராணுவத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து, பாராட்டு
எல்லை பகுதிகளில் தயார் நிலையில் இந்திய ராணுவம்
பாக். பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய ராணுவம் தயார் நிலை
இந்தியா - பாக் எல்லையில் போர் பதற்றம்
இந்திய விமானப்படை முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது
காஷ்மீர் மட்டுமின்றி அனைத்து எல்லையிலும் உஷார் நிலை
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம்
நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு
இந்திய பங்குச் சந்தைகள், ரூபாய் மதிப்பு சரிவு
பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் சரிவு
கட்ச் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்
பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
இந்திய விமானப்படை தாக்குதல் பற்றி சற்று நேரத்தில் வெளியுறவு செயலாளர் செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர்களிடம் தாக்குதல் தொடர்பாக விவரிக்கிறார் விஜய் கோகலே
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மீது தாக்குதல் தேவைப்பட்டது
பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது இதனால் தாக்குதல் நடத்தினோம்
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்கள் கொல்லப்பட்டனர்
மசூத் அசார் மைத்துனர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்- கோகலே
வெளியுறவுத் துறை செயலாளர் கோகலே செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத குழுக்கள் இயங்குகின்றன
பாகிஸ்தான் இதுவரை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்கிறார் சுஷ்மா சுவராஜ்
பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கிறார்
இந்திய விமானப்படை தாக்குதலுக்கு எடப்பாடி பாராட்டு
பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாடுக்கு முதல்வர் பழனிசாமி புகழாரம்
தமிழக மக்கள் சார்பாக நன்றி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இந்திய விமானப்படை வீரர்களின் தீரச் செயல் போற்றுதலுக்குரியது - மு.க.ஸ்டாலின்
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை அழித்த தீரர்களுக்கு சல்யூட் - கமல்ஹாசன்
தாக்குதல் நடத்திய 12 விமானங்களும் பத்திரமாக திரும்பியது மகிழ்ச்சி - கமல்
பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல்
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பாராட்டு
பிராவோ இந்தியா என்று டுவிட்டரில் ரஜினிகாந்த் பாராட்டு
இந்தியா தற்போது பாதுகாப்பாக உள்ளது- மோடி பேச்சு
இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு மோடி முதல் உரை
ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் மோடி உரை
இந்திய பாதுகாப்புத்துறை இன்று நடத்திய 2 ஏவுகணை சோதனை வெற்றி
விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டது
பாலிவுட் படங்களை பார்ப்பதால் வந்த விளைவு - இம்ரான் கானின் பிடிஐ கட்சி விமர்சனம்
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது குறித்து பிடிஐ விமர்சனம்
சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்
12-15 இடங்களில் நேற்று மாலையில் இருந்து பாக். தாக்குதல் நடத்துகிறது
பாக். தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் படுகாயம்
இந்திய ராணுவமும் திருப்பி தாக்குவதால் பெரும் பதற்றம்
நேற்று மாலை 6.30 மணியில் இருந்து பாக். தாக்குதல் நடத்தி வருகிறது
சர்ப்ரைஸ் தாக்குதலுக்கு தயாராக இருங்கள் - பாக். ராணுவ மேஜர்
பாக்.ராணுவ மேஜர் ஆசிப் காஃபர் இந்தியாவிற்கு எச்சரிக்கை
நீங்கள் அதிர்ச்சியடைய வேண்டிய நேரமிது - ஆசிப்
நீங்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான பதிலடியை நாங்கள் கொடுக்க போகிறோம் -ஆசிப்
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
சீனாவில் வாங் யீயை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்
பாக். மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த சந்திப்பு நடக்கிறது
பாகிஸ்தானுக்கு எதிராக சீனாவிடம் இந்திய தரப்பு பேச முடிவு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா பாகிஸ்தான் மீது கடும் தாக்கு
சீனாவில் நடக்கும் ''ரஷ்யா -சீனா - இந்தியா'' நாடுகளின் மாநாட்டில் பாக். மீது சுஷ்மா விமர்சனம்
புல்வாமா தாக்குதலை பாக். தொடர்ந்து மறுத்து வந்தது - சுஷ்மா
ஜெய்ஷ் இ முகமது இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று பாக். கூறியது - சுஷ்மா
உலக நாடுகள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பாக். மட்டும் இதை மறுத்தது - சுஷ்மா
புல்வாமா தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் நடத்தியது - சுஷ்மா
ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தானில் இயங்கி வரும் அமைப்பு ஆகும்
ஜெய்ஷ் இ முகமது தாக்குதலில் நாங்கள் 40 வீரர்களை பலி கொடுத்தோம் - சுஷ்மா
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்
எந்த விதமான இரக்கமும் இன்றி நாம் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் - சுஷ்மா
READ MORE
English summary
IAF Pilot Abhinandan to be repatriated today from Pakistan to India.