Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செபியில் வந்ததை விட ஐந்து மடங்கு சம்பளம்.. மாதபிக்கு ரூ.16.8 கோடி தந்தது ஏன்.. ஐசிஐசிஐ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்க்கு விதிமுறைகளை மீறி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்தும் மாதாமாதம் சம்பளம் கொடுத்தாகவும், மாதபிக்கு ரூ.16.8 கோடி ஊதியத்தை ஐசிஐசிஐ தந்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இதனை மறுத்துள்ள ஐசிஐசிஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதன்படி வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதிய பலன்களைத் தவிர வேறு எதுவும் தரவில்லை என கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குச்சந்தை ஆய்வு நிறுவனம் , கௌதம் அதானியின் நிறுவனம் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை கூறியது. அதாவது, வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்திருக்கிறது என்று கூறி சில ஆதாரங்களை வெளியிட்டது.

bank icici sebi

இந்நிலையில் அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதபிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் கட்டுரை வெளியிட்டது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பா்க் அண்மையில் குற்றச்சாட்டை கூறியது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தாா்.

இந்நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிறுவனங்களின் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் மத்திய அரசின் அமைப்பான செபியின் தலைவராக இருக்கும் மாதபி புரி புச், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டினார். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பணத்தை ஒழுங்குப்படுத்துவது செபியின் வேலை. ஆனால், நமது நாட்டில் இந்த விஷயத்தில் சதுரங்க ஆட்டம் நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியான மாதபி புரி பச் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்

மாதபி புரி புச் ஏப்ரல் 5, 2017 முதல் அக்டோபர் 4, 2021 வரை செபியின் நிரந்தர உறுப்பினராக இருந்து வந்தார். பின்னர், மார்ச் 22,2022 முதல் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. செபியின் தலைவரை நியமிக்கும் குழுவில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில், மாதபி புரி புச் செபியின் முழுநேர ஊழியராக இருந்தபோது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து கடந்த 2017 முதல் 2024 வரை வழக்கமான சம்பளமாக ரூ. 16.80 கோடி வரை பெற்றிருக்கிறார். அதாவது செபியிடம் இருந்து அவா் பெற்ற ரூ.3.3 கோடி ஊதியத்துடன் ஒப்பிடுகையில் வங்கியிலிருந்து வந்த ஊதியம் 5.09 மடங்கு அதிகம் ஆகும்.

இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து ஐ.சி.ஐ.சி.ஐ .புருடென்ஷியல், பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) அதற்கான வரிவிலக்கு ஆகியவற்றையும் பெற்று வந்திருக்கிறார். செபியின் முழுநேர உறுப்பினராக இருந்த நீங்கள் எதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்றீர்கள் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.. இது செபியின் விதிகளில் பிரிவு 54 -ஐ மீறிய செயல் ஆகும். இந்த விவகாரத்தில் செபி தலைவர் மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" இவ்வாறு பவன் கேரா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்து ஐசிஐசிஐ வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாதபி புச் ஓய்வுபெற்ற பிறகு, அவரது பணிக்காலத்துக்கான பணப்பலன்கள் மற்றும் ஈஎஸ்ஓபிகளை மட்டும் தான் (பணியாளர் பங்கு உரிமைத் திட்டங்கள்) வழங்கி உள்ளோம். எனவே, 2017ஆம் ஆண்டு செபியில் சேர்ந்ததில் இருந்தே மாதபி புச் ஐசிஐசிஐயிலிருந்து ஊதியம் பெற்றதாகவும், அது மொத்த வருமானம் ரூ.16.8 கோடியைப் பெற்றதாக காங்கிரஸ் கூறியிருப்பதில் துளியும் உண்மையில்லை . அதுபோல, மாதவி வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு, ஓய்வூதியப் பலன்களைத் தவிர, ஊதியமோ அல்லது வேறு எந்த பணப்பலன்களையும் ஐசிஐசிஐ வங்கியோ அல்லது அதன் வேறு எந்த குழுமமோ அளிக்கவில்லை" இவ்வாறு ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

மாதபி ஐசிஐசிஐ நிறுவனத்திடம் வாங்கிய இஎஸ்ஓபி என்பது பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் ஆகும். பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உரிமை மீது பணப்பலனை பெறும் திட்டம் ஆகும். குறிப்பிட்ட நிறுவத்தை விட்டு விடைபெறும் போது, அந்த நிறுவனத்தின் பங்குகள் மூலம் இது வழங்கப்மாதபிடுகிறது. ஓய்வூதிய பலணப்பலனான இது வழங்கப்படுகிறது. இதனை வேலை செய்யும் நிறுவனத்திற்கோ அல்லது சந்தையிலோ தங்களது பங்குகள் விற்றுவிட்டு வெளியேறும். இந்த திட்டம் பரவலாக பெரிய நிறுவனங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறது.

செபி தலைவராகும் முன்பு மாதபி புச், ஐசிஐசிஐ வங்கியில் பல முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். ஐசிஐசிஐ நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னர் செபி தலைவர் ஆனார் என்கிற நிலையில், காங்கிரஸ் கட்சி வைத்துள்ள குற்றச்சாட்டு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+