திணறும் தலைநகர்... யார் தான் ஆக்சிஜன் விநியோகத்திற்கு தடையாக உள்ளனர்? டெல்லி ஹைகோர்ட் பாய்ச்சல்
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் விநியோகத்திற்குத் தடையாக இருப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை பட மடங்கு அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களும் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், தலைநகரிலுள்ள பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

கையை மீறிச் செல்லும்
இதில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "டெல்லிக்குத் தினசரி 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. இல்லை, என்றால் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். கடந்த 24 மணி நேரத்தில் இதைத்தான் பார்த்தோம். நிலைமை இப்படிச் சென்றால் பேரழிவு நடக்க வாய்ப்புள்ளது. டெல்லிக்கு நேற்று 297 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் ஆக்சிஜன் ஒதுக்கீடு மற்றும் விநியோக அட்டவணை குறித்த தெளிவான விவரங்களுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பது யார்
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மத்திய அரசு வழக்கறிஞரிடம், டெல்லிக்கு எப்போது தான் 480 மெட்ரிக் டன் ஆக்ஜினை வழங்கப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், டெல்லி அரசிடம் ஆக்சிஜன் விநியோகத்தில் யார் தடையாக இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுங்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
Recommended Video

கடமையைச் செய்ய வேண்டும்
அதேநேரம் மத்திய அரசு இன்று மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசையே சாடியது. மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், "மற்ற மாநிலங்கள் எல்லாம் ஆக்சிஜனை அனைத்து இடங்களில் இருந்தும் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் டெல்லி அரசு எல்லா பொறுப்பையும் எங்களிடம் கொடுத்து விடுகிறார்கள். டெல்லி அரசு அதிகாரிகள் அவர்களின் கடைமையைச் சரிவரச் செய்ய வேண்டும்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications