"மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தால்.. மாநில அரசால் விருப்பப்படி செயல்பட முடியாமல் போகும்!" உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட ஒரு விளக்கக் குறிப்பை அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற நிலையில், அப்போது நீதிபதிகள் ஆளுநர்கள் மசோதாவை நிறுத்திவைப்பது குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
தமிழக அரசு நிறைவேற்றும் பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இது தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்து வழக்கில் அரசுக்குச் சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியின் 14 கேள்விகள்
இது அப்போதே பேசுபொருள் ஆனது. நாடு முழுக்க அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜனாதிபதி திரௌபதி முர்முவும் இது தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி விளக்கக் குறிப்பை அளித்திருந்தார். ஜனாதிபதி கேள்வி தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இப்போது விசாரித்து வருகிறது.
4 ஆப்ஷன்கள் இருக்கு
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநருக்கு நான்கு ஆப்ஷன்கள் உள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும், "ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், மசோதாவை நிறுத்தி வைக்கலாம், மசோதாவை திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஆலோசனைக்காக அனுப்பலாம். இந்த முடிவுகள் ஆளுநரின் விருப்பத்திற்குட்பட்டவை" என்றார்.
அப்போது நீதிபதிகள், மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், அவ்வாறு செய்தால் தனது நோக்கத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசின் சட்டத்திற்கு முரணாக இருந்தால் மட்டுமே ஒரு மாநில மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைக்க முடியும் என விளக்கினார்.
சரிமாரி கேள்வி
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஆளுநரால் ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது தோல்வியடைந்ததாக கருதப்படுமா? ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும்போது, அதை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாதா? அதாவது ஒரு மசோதை மீது இறுதி முடிவை எடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக சொல்கிறீர்களா? மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது செயலிழந்துவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளை ஆளுநர்கள் ரத்து செய்யும் அதிகாரம், பெரும்பான்மை ஆதரவு பெற்ற அரசை கட்டுப்படுத்தும் அல்லது சீர்குலைக்கும் நிலை உருவாகலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் முடிவுகளுக்கு மாறாக, ஆளுநர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மசோதாவை நிறுத்தி வைப்பது சரி இல்லை." என்றார்.
தமிழக அரசு
முன்னதாக கடந்த சில வாதங்களுக்கு முன்பு, குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளைக் கொண்ட குறிப்பின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் கேரள அரசும் தங்கள் வாதத்தைத் தாக்கல் செய்திருந்தன. அதேநேரம் மத்திய அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்தது. இந்தத் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கும் சிறப்புரிமையில் அதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது என்றும் கூறியது.
தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது இது மேல்முறையீட்டு விசாரணை இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், ஆலோசனை என்ற வரம்பிலேயே இதை விசாரிப்பதாகத் தெரிவித்தனர். அதாவது இந்த விசாரணை முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றாது எனத் தெரிவித்தனர்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அதிகார வரம்பில் கூட தீர்ப்பை ரத்து செய்ய முடியும்" என்ற வாதத்தை முன்வைத்தார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி காவாய், "கருத்தைத் தான் ரத்து செய்ய முடியும், ஒரு முடிவை அல்ல" என்றார்.
ஏற்க மறுப்பு
தொடர்ந்து விவாதம் நடந்த நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசியலமைப்புச் சட்டம் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை.. விரைவாக ஒப்புதல் தர வேண்டும் என மட்டுமே சொல்லியுள்ளது" எனத் தெரிவித்தார். இருப்பினும், அதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், "விரைவாக என்றால் குறிப்பிட்ட நேரத்தில் ஒப்புதல் தர வேண்டும் என்றே அர்த்தம்" என்றார்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications