"ராமர்" என்று சொன்னாலே கைது.. காங்கிரஸ் ஆட்சியில் இதுதான் நடக்க போகுது.. பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: இந்தியாவை இரண்டாகப் பிரித்ததே காங்கிரஸ் கட்சி தான் என்று சாடிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 'ராம் ராம்' என்று சொல்லும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நாட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் பிவானி-மகேந்திரகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தரம்பீர் சிங்கிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ராமர் என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி: ஹரியானாவின் மகேந்திரகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, "அடுத்த ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை வைத்து எப்படி ஆட்சி செய்யலாம் என இந்தியக் கூட்டணி ஆலோசனை செய்து வருகிறார்களாம்.. பசுப் பால் கொடுக்கும் முன்னரே நெய் யாருக்கு என்ற சண்டை வெடித்துள்ளது.
நான் உயிருடன் இருக்கும் வரை, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.. இந்தியா கூட்டணி மிகவும் வகுப்புவாத, சாதிவெறி கொண்ட கூட்டணி.. வாரிசு அரசியலை ஆதரிக்கும் ஒரு கூட்டணியாகும்.
ராமர் என்றாலே கைது: ஹரியானாவில் இங்கு மக்கள் எப்போதும் 'ராம் ராம்' என்பார்கள்.. ஒவ்வொரு 10 அடி நடந்த பிறகும் மக்கள் 'ராம் ராம்' என்பார்கள்.. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 'ராம் ராம்' என்று சொல்பவர்களும் கூட கைது செய்யப்படுவார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம் வரை ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பைக் கூட அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் ராமர் கோவிலுக்குப் பூட்டுப் போட வேண்டும் என்பதே இளவரசரின் (ராகுல் காந்தி) விருப்பம்.. காங்கிரஸ் இந்திய மக்களின் பக்தியை அவமதித்து விட்டது.
யார் இருக்கிறார்கள்: இந்தத் தேர்தலில் நீங்கள் நாட்டின் பிரதமரை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை.. நாட்டின் எதிர்காலத்தையும் நீங்கள் தீர்மானிக்க உள்ளீர்கள்.. ஒரு பக்கம் உங்களின் சேவகன் மோடி இருக்கிறான். மற்றொரு புறம் யார் இருக்கிறார்கள் என்றே ஒருவருக்கும் தெரியாது
ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் என்று ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள் என இந்தியா கூட்டணி பேசி வருகிறது. ஒரு நாட்டை இப்படி நடத்த முடியுமா.. இது நல்ல நல்ல ஜோக்காக மட்டுமே இருக்கும்.. காங்கிரஸின் உண்மையான முகம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்.
பிரிவினை: காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நாட்டில் தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்ற நாட்டைப் பிரித்து, இரண்டு முஸ்லிம் தேசங்களை உருவாக்கினார்கள்.. இந்த பிரிவினையைச் செய்ததே காங்கிரஸ் தான்.. இப்போது இந்தியா கூட்டணி தலைவர்கள், இந்தியாவின் எஞ்சிய பகுதி மீதும் முஸ்லீம்களுக்குத் தான் முதல் உரிமை உள்ளது என்கிறார்கள். அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காகவே இப்படி எல்லாம் செய்கிறார்கள்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.. ஆனால் அதைப் பிடுங்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.
மேற்கு வங்க சர்ச்சை: மேற்கு வங்கத்தில் இதைத் தான் செய்தார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டிற்குப் பதில் முஸ்லிம்களுக்கு ஓபிசி சான்றிதழை வழங்கினர்.. அதுவும் ஊடுருவல்காரர்களுக்கு வழங்கினர். இது தொடர்பான வழக்கில் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்றார். நீதிமன்றம் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
நமது தாழ்த்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகள் என்ன செய்ய முடியும்? இதுதான் இந்தியா கூட்டணி மனநிலை. இப்போதும் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார். அவர் முஸ்லிம்களுக்குத் தான் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவாராம். அவர்களுக்கு வாக்கு வங்கி மட்டுமே முக்கியம்" என்றார்.
-
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications