"பர்த் டே பார்ட்டி".. பிரச்சனைக்குரிய மாநிலம்.. நாகாலாந்து ஆளுநரானார் இல.கணேசன்.. நடந்தது என்ன?
முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
டெல்லி: மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரிடம் ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக இருந்த மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் கைவல்ய திரிவிக்ரம் பர்னாய்க் அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஆளுநர்கள் மாற்றம்
சிவ் பிரதாப் சுக்லா- இமாச்சல பிரதேசம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். குலாம் சந்த் கட்டாரியா- அஸ்ஸாம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர்- ஆந்திரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆந்திரா ஆளுநர் பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் - சத்தீஸ்கர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஶ்ரீ அனுசுயா- மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

என்ன நடந்தது ?
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகான் - மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இமாச்சல பிரதேச ஆளுநர்- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- பீகார் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயாஸ்- மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பிடி மிஸ்ரா- லடாக் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

நியமனம்
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரிடம் ஏற்கனவே கூடுதல் பொறுப்பாக இருந்த மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தனது அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாளை சமீபத்தில் அவர் கொண்டாடினார். அதற்கு . மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வந்திருந்தார். இந்த நிகழ்வில் மம்தாவுடன் இல கணேசன் நட்பாக இருந்தார். அதேபோல் ஆளுநர் பதவியிலும் இவர் மம்தாவுடன் நட்பாக இருந்தார். இதனால் டெல்லி தரப்பு இவர் மீது கோபம் அடைந்ததாக கூறப்பட்டது.

அதிருப்தி
அவரின் செயலில் அதிருப்தி அடைந்த டெல்லி அவரின் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை நீக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆனந்த் போஸ் என்பவர் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் மணிப்பூர் ஆளுநராக மட்டும் இல.கணேசன் தொடர்ந்து வந்தார். தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இடையில் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது போராளி குழுக்கள் அதிகம் உள்ள, பாதுகாப்பு பிரச்சனைகள் நிரம்பிய நாகாலாந்திற்கு ஆளுநராக இல கணேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications