சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரம்: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 30 ஆம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சூதாட்ட செயலிகளை சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரித்து பிரபலப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தெலுங்கானா மாநிலம் மியாபூர் நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கொடுத்த புகாரில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்துவதன் மூலம் அதிக அளவில் கமிஷன் தொகைகளை சில நடிகர், நடிகைகள் பெறுவதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மியாபூர்நகர் போலீசார் விசாரணை நடத்தி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லட்சுமி மஞ்சு, நிதி அகர்வால் உள்பட 29 பிரபலங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் பஞ்சகுட்டா, சைபராபாத், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சூதாட்டச் சட்டம், 1867 ஐ மீறி சட்டவிரோத பந்தய செயலிகளை ஊக்குவித்ததாகக் கூறி, நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் யூடியூபர்கள் உள்பட 29 பேர் மீது அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை அமலாக்க இயக்குனரகம் பதிவு செய்துள்ளது.
பஞ்சகுட்டா, மியாப்பூர், சைபராபாத், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட 5 தனித்தனி வழக்குகளை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 29 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனை விவரங்களை ஆய்வு செய்யவும், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 30 ஆம் தேதி ஆஜராக பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கபட்டு இருந்தது. அதில், ‛‛கடந்த 2016ம் ஆண்டில் ஜங்லீ ரம்மியை விளப்படுத்தினேன். ஆனால் ஒரு ஆண்டுக்குள் எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இது தொழில்நுட்ப ரீதியான சட்டத்துக்கு உட்பட்டது என்றாலும் நெறிமுறைகளில் பிரச்சனை இருந்தது. அதன்பிறகு எந்த சூதாட்ட செயலியையும் விளம்பரப்படுத்தவில்லை'' என்று கூறப்பட்டு இருந்தது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications