ஜெமினி ஏஐ-யில் மோடி பற்றி சர்ச்சை கருத்து! வம்பில் சிக்கிய கூகுள்! ஆக்ஷனுக்கு தயாராகும் மத்திய அரசு
டெல்லி: கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ கருவியில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் கூகுளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் வளர்ச்சி கற்பனை செய்யாத முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக சாட்ஜிபிடி ஏஐ துறையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்தை உருவாக்கியது ஓபன் ஏஐ நிறுவனமாகும். இதில் மைக்ரோசாப்ட் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளது.

சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் ஜெமினி என்னும் செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்தது. இந்த சாட்ஜிபிடி மூலம் நாம் கேட்கும் தகவல்களை உடனுக்கு உடன் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக ஒரு கடிதம் எழுதி கேட்டால் அடுத்த நொடியே அந்த கடிதம் நாம் விரும்பிய வடிவங்களில் கடிதங்களை கொண்டு வந்து கொட்டும்.
மோடி மீதான கேள்விக்கு சர்ச்சை பதில்: அதேபோல ஏதாவது ஒரு தலைவரை பற்றிய விவரத்தை கேட்டால் அந்த தகவல்களும் உடனே வந்துவிடும். தற்போது இணைய உலகில் கூகுளின் ஜெமினி ஏஐ தளத்தை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்த நிலையில், ஜெமினி ஏஐ தளத்தில் பிரதமர் மோடி பற்றி சட்ட விரோத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் ஸ்கீரின் ஷாட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். பிரதமர் மோடி ஒரு பாசிஸ்ட் நபரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜெமினி தளம், சில எக்ஸ்பர்ட்ஸ் பாசிஸ்ட் என்று வகைப்படுத்தும் வகையிலான சில கொள்கைகளை அமல்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவின் இந்து தேசிய சித்தாந்தம், எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை, மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை போன்ற காரணிகள் அடிப்படையிலானது ஆகும்” என்று பதிலளித்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்ற்கு எதிராக இதே கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த ஜெமினி தளம், தேர்தல் என்பது சிக்கலான தலைப்பு. தொடர்ந்து தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே துல்லியமான தகவலை பெற கூகுள் செர்ச் செய்யுங்கள்” என்று பதிலளித்துள்ளது.
இந்த ஸ்கீரின் ஷாட்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், மோடி பற்றிய ஜெமினி ஏஐ கருவியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கூறுகையில், "இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்க முடிவு செய்து இருப்பதாகவும் இதற்கான நடைமுறைகள் சென்று கொண்டு இருப்பதாகவும்" கூறியுள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications