Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி இல்லை.." சிறையில் டெல்லி முதல்வரை கொடுமைப்படுத்துவதாக புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி இப்போது சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே மெசேஜ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்தார். இருப்பினும், அதில் ஊழல் நடந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க டெல்லி ஆளுநர் உத்தரவிட்டார்.

Im not a Terrorist Delhi CM Arvind Kejriwal Sends new Message From Jail

இந்த வழக்கில் ஆம் ஆத்மியின் பல முக்கிய தலைவர்கள் கைதாகினர். குறிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தாலும் கூட அவர் ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

கெஜ்ரிவால்: இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இப்போது புதிய மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் 24 மணி நேரமும் போலீசார் தன்னை கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், தினசரி என்ன செய்கிறேன் என்பதையும் குடும்பத்தினர் உடனான சந்திப்புகளைக் கூட போலீசார் கண்காணிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தான் ஒன்றும் பயங்கரவாதி இல்லை.. சாதாரண மனிதன் தான் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், "சிறையில் இருந்தாலும் கூட கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காகவே உழைத்து வருகிறார். கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதை நான் வாசித்துக் காட்ட விரும்புகிறேன்" என்று சொன்ன அவர் கெஜ்ரிவால் அனுப்பிய செய்தியை வாசித்துக் காட்டினார்.

பயங்கரவாதி இல்லை: அதில், "என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால், நான் பயங்கரவாதி அல்ல.. நீங்கள் இப்படி நடந்துகொள்ள வெட்கமாக இல்லையா? மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை. கண்ணாடி ஜன்னல் வழியாகவே சந்திக்க வேண்டும் என்கிறார்கள்" என்று கெஜ்ரிவால் அனுப்பிய மெசேஜை வாசித்துக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய சஞ்சய் சிங், "பிரதமருக்கு எதற்காக கெஜ்ரிவால் மீது இந்தளவுக்கு வெறுப்பு என தெரியவில்லை. கெஜ்ரிவாலை இவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள்.. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வந்திருந்த போது கூட நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை. பிரதமரின் இதயத்தில் எந்தளவுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.. ஒரு முதலமைச்சரிடம் இப்படி நடந்து கொள்கிறீர்களா? 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிக்கிறார்கள்.

துன்புறுத்த முடியாது: அவரை எப்படி தான் துன்புறுத்த முடியும் என்றே பார்க்கிறார்கள். ஆனால், கெஜ்ரிவால் இதை எல்லாம் கண்டு அஞ்சுபவர் இல்லை. ஐஆர்எஸ் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டுக்குச் சேவை செய்ய வந்தவர் அவர்.. டெல்லியில் முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த போதும் கொள்கைகளுக்காக 49 நாட்கள் ராஜினாமா செய்தவர். அந்த கெஜ்ரிவாலை காலி செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது" என்றார்.

பஞ்சாப் முதல்வர்: முன்னதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொடூரமான குற்றவாளிக்குக் கிடைக்கும் வசதிகள் கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் என்ன குற்றம் செய்தார்?

பள்ளிகள், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள் கட்டினார். பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். ஆனால் நாட்டின் பெரிய தீவிரவாதியைக் கைது செய்தது போல் நடத்துகிறீர்களா? இது என்ன நியாயம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+