வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு மழை எப்படி இருக்கும்! வானிலை மையம்
டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை தொடங்கியது முதலே ஓரளவு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தச் சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதி மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ள நிலையில், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடையும். கடலில் இருந்து 7.6 கிலோ மீட்டர் உயரத்தில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஓடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை நோக்கி வடமேற்கு திசையில் நகரும்.

மழை இருக்கும்
இதன் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்தமான் தீவுகள், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல 10ஆம் தேதிக்குப் பின்னர் மத்தியப் பிரதேசம், குஜராத், உள்ளிட்ட வட மேற்கு மாநிலங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
ஆந்திர கடலோர பகுதிகள், கர்நாடகாவில் வடக்கு உள்மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல கேரளா மற்றும் தெலங்கானாவிலும் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள்
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

காற்று வீசும்
மேலும், கடலோர மாவட்டங்களில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக











Click it and Unblock the Notifications