டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தனது வானிலை (Weather) அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை (south west monsoon) மே 16ம் தேதி துவங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழை - வீடியோ

    கத்திரி வெயில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுட்டெரித்து வருகிறது. வட மாநிலங்களில், இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.

    அடுத்த 36 மணிநேரங்களுக்கு வடமேற்கு இந்தியாவில் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டியின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் (NWFC) தெரிவித்துள்ளது.

    ஆஹா.. கொரோனாவுக்கு மத்தியில் குளுகுளு செய்தி.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஆஹா.. கொரோனாவுக்கு மத்தியில் குளுகுளு செய்தி.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சூறாவளி சுழற்சி

    மே 14 முதல் மற்றொரு மேற்கத்திய வெப்ப சலன காற்றழுத்தம் இப்பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது, அதன் காரணமாக அடுத்த 2-3 நாட்களுக்கு மழை தொடரும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. மேற்கத்திய வெப்ப சலனம் என்பது, மத்தியதரைக் கடலில் இருந்து உருவாகி மத்திய ஆசியா முழுவதும் பயணிக்கும் ஒரு சூறாவளி சுழற்சி ஆகும். இது இமயமலையால் தடுக்கப்படும். எனவே, மலைகள் மற்றும் வட இந்திய சமவெளிகளில் மழை பெய்யும் வாய்ப்பை அதிகரிக்கும்.

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். மேக திரட்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர கர்நாடகாவிலும் மே 13 மற்றும் 14 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    அதிக மழை

    அதிக மழை

    அஸ்ஸாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் மே 12 முதல் 14 வரையிலான தேதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. காற்றும் பலமாக வீசக்கூடும்.

    வட கிழக்கு

    வட கிழக்கு

    அடுத்த 12-15 நாட்களில் வடகிழக்கு இந்தியாவில் பரவலான மழை / இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். . கிழக்கு இந்திய மாநிலங்களில் அடுத்த 11 நாட்களில் ஓரிரு இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Several parts of the country are likely to receive light to moderate rain, with instances of thunderstorm activities at isolated places, this week, the India Meteorological Department said on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X