டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை.. உயிரிழப்பு அதிகரிக்கும் முன்.. உடனடி நடவடிக்கை தேவை.. டெல்லி ஐகோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு பூஞ்சை நோயைக் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன், அதற்குத் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    Black Fungus எப்படி ஏற்படுகிறது? | எவ்வாறு தடுப்பது? | Treatments & Medicines | Dr VPB Paramasivam

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பல உருமாறிய வைரஸ்கள் வகைகளும் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதுதவிர கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மத்தியில் கருப்பு பூஞ்சை நோயையும் வேகமாகப் பரவுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

     Import Amphotericin-B now to meet demand before precious lives are lost to Black Fungus says Delhi HC

    இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் Amphotericin-B என்ற மருந்தை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இறக்குமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    ராகேஷ் மல்ஹோத்ரா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விபின் சங்கி, ஜஸ்மீட் சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, "ஒட்டுமொத்தமாக நாட்டில் Amphotericin-B என்ற மருந்து இன்றைய தேவையைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை இரட்டிப்பாக உற்பத்தி செய்தாலும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சம் உள்ளது.

    கொரோனா 2ஆம் அலையால் ஆபத்தில் சிறார்கள்.. முழு தரவுகளை திரட்ட அதிகாரிகளுக்கு.. பிரதமர் அறிவுறுத்தல்கொரோனா 2ஆம் அலையால் ஆபத்தில் சிறார்கள்.. முழு தரவுகளை திரட்ட அதிகாரிகளுக்கு.. பிரதமர் அறிவுறுத்தல்

    மனித உயிரும், நேரமும் இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்கும் முன்னர் மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டும். உடனடியாக இதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும்" என தெரிவித்தனர்.

    மேலும், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    English summary
    Delhi HC on Black Fungus medicine import.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X