தன்பால்ஈர்ப்பு முதல் முத்தலாக் வரை.. நீதி துறையை புரட்டிப்போட்ட நீதிபதி ரோஹிண்டன் நாரிமன்..யார் இவர்
டெல்லி: ஏழு ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் இன்று ஓய்வு பெறுகிறார்.
இந்தியாவிலுள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் அளித்த முக்கிய தீர்ப்புகளைப் பார்க்கலாம்.

ஐடி சட்டப்பிரிவு 66 ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு
நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் கூறுகையில் "எந்தவொரு விஷயத்திலும் ஒருவரது கருத்து மற்றவருக்கு எரிச்சலையும், சிரமத்தையும் ஏற்படுத்தலாம். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு உள்ளிட்டவை குறித்த முற்போக்குவாதிகளின் கருத்து சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரைக் கடுமையாகப் புண்படுத்தப்படலாம். இப்படி கருத்து கூறுபவர்கள் அனைத்தும் ஐடி சட்டப்பிரிவு 66ஏ மூலம் தண்டிப்பட வாய்ப்புள்ளது. அதாவது ஐடி சட்டப்பிரிவு 66ஏ மூலம் எந்த கருத்து கூறினாலும் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இது நமது அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பேச்சுரிமையைக் கேள்விக்குள்ளாகும் வகையில் உள்ளது" என்றார்.

தன்பால் ஈர்ப்பைக் குற்றமில்லை என அறிவித்தது
இந்தியாவில் தன்பால் ஈர்ப்பைத் தண்டனைக்குரிய குற்றமாக வைத்திருந்த சட்டப்பிரிவு 377 நீக்கி இவர் பிறப்பித்த உத்தரவு, நவீன இந்திய வலராற்றில் என்றும் இடம்பெறும். அப்போது அவர், "இந்த அடிப்படை உரிமைகள் தேர்தலின் முடிவைப் பொறுத்து மாறாது. மேலும், சமூகத்தில் எது சரி. எது தவறு என்பது தொடர்பான விஷயங்களில் மரபுவழி ஏதுவாக இருக்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்ய முடியாது. இந்தியா அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் மிக மிக முக்கியமானது. ஒட்டுமொத்த சமூகத்தின் மீது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சிந்தனையைச் செலுத்த முயலும்போது, அப்போது அடிப்படை உரிமைகள் சவால்விடப்படுகிறது என அர்த்தம். தற்போதைய ஆய்வுகளில் தன்பால் ஈர்ப்பு என்பது மனநல பிரச்சினை இல்லை. இது இயற்கையான ஒன்று எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே தன்பால் ஈர்ப்பார்களைத் தண்டிப்பது நியமமற்றது" என்றார்.

முத்தலாக்
அதேபோல முத்தலாக் என்பது இந்திய அரசியலமைப்பிற்கு பொறுந்தாத ஒன்று என இவர் அளித்த தீர்ப்பும் அதிமுக்கியமானது. அப்போது அவர், "தன்னிச்சையான நியாயமற்ற பழக்க வழக்கங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்துள்ள இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14ஐ மீறுகிறது. அதை அனுமதிக்க முடியாது "என்றார்.

சட்டப்பிரிவு 497ஐ நீக்கியது
ஐபிசி 497இன் கீழ், திருணமான ஒரு பெண்ணுடன் ஆண் ஒருவர் உறவு கொண்டிருந்தால், அப்போது அந்தப் பெண்ணை தண்டிக்க வேண்டும் என இருந்தது. இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், "ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்க உட்படுத்தும் ஒரு சட்டப்பூர்வமான விதிமுறையானது நவீன அரசியலமைப்பின் கோட்பாட்டையே ஒட்டுமொத்தமாகச் சீரழிக்கிறது. இது போன்ற சட்டங்கள் நீக்கப்பட வேண்டியவை" என்றார்.

சட்டப்பிரிவு 21
இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் தனிநபரின் கண்ணியத்தைக் குறிப்பிடும் சட்டப்பிரிவு 21 தான், நமது ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்பின் முன்னுரையாகும் என்று வழக்கு ஒன்றில் ரோஹிண்டன் நாரிமன் அளித்த தீர்ப்பு, சட்டப்பிரிவு 21இன் முக்கியத்துவத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

இந்தியாவின் புனித நூல் அரசியல் சாசனம்
சபரிமலை விகாரத்தில் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் கூறுகையில், "இந்தியாவின் புனித நூல் அரசியல் சாசனம் என்பதை அனைத்து இந்தியரும் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து இந்தியர்களை ஒரு நாட்டின் கீழ் ஒருங்கிணைப்பது இந்த அரசியல் சாசனம் தான். இந்த மகா சாசனத்திலுள்ள குறிக்கோள்களை நனவாக்குவதற்கு, எல்லா மனித முயற்சிகளோடும் முன்செல்ல, இந்திய குடிமக்கள் நாம் ஒரு நாடாக நடைபோடுகிறோம்." என்றார்,

இந்திய அரசியல்
இதேபோல இந்திய அரசியலில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வேதனை தெரிவித்த நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், சட்டத்தை மீறி குற்றவாளியான நபர்கள் கைகளில் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு அளிப்பது சரியாக இருக்காது என்றார். அதேபோல கன்வர் யாத்திரைக்கு அனுமதிக்க மறுத்த ரோஹிண்டன் நாரிமன், இந்தியர்களின் உடல்நிலையே அனைத்து அடிப்படை உரிமைகளைக் காட்டிலும் முக்கியமானது என்றார். இப்படிப் பல முக்கிய தீர்ப்புகளை அளித்த நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெற்றாலும்கூட அவரது தீர்ப்புகள் வரும் காலத்தில் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் மிக முக்கிய பங்காற்றும்...!
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications