டெல்லி ஆலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.. 7 பேர் பலி..மற்றவர்களை காப்பாற்ற போராட்டம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி ஆலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து-வீடியோ

    டெல்லி: டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

    வடக்கு டெல்லியில் மோதி நகர் பகுதியில் 2 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தில் மின் விசிறிகள் தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அதற்காக மின் விசிறிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகள் நடைபெற்று வந்துள்ளது.

    In delhi, 7 dead after gas cylinder blast at moti nagar factory

    இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்துள்ளது. அதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஒருவித பரபரப்பு நிலவியது.

    விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். ஆலையில் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை உடைத்து அதன் பின்னர் அவர்கள் உள்ளே புகுந்தனர்.அதை தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

    அங்கிருந்து 15 பேர் மீட்கப்பட்டு ஆச்சார்யா பிக்சு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 வயது குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர். 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+