அடங்காத "அணில்".. ‘சைக்கோ'வாக மாறி பார்ப்போரை எல்லாம் விரட்டி விரட்டி கடிக்குதே.. அலறும் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இந்த தலைப்பை பார்த்ததுமே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பது புரிகிறது. ஆனால் இந்த செய்தி அப்படியானது இல்லை. உண்மையிலேயே 'சைக்கோ' அணில் ஒன்று ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் அலறவிட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் பேராசிரியர்கள் என்று மொத்தம் 20 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. ஆம், நீங்கள் படித்தது உண்மை தான். இப்படி 'அட்ராசிட்டி' செய்யும் அணிலின் கதையை தான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் அமைந்துள்ளது மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் தான் தற்போது 'டாக் ஆப் தி டவுன்' ஆக ராஜஸ்தானில் மாறிப்போய் உள்ளது. இப்படி சொன்னதுமே பல்கலைக்கழகம் ஏதோ பெரிய சாதனை படைத்துள்ளது? என்று நினைக்க வேண்டாம்.

in-rajasthan-university-squirrel-bites-20-people-including-students-and-professors
Photo Credit:

இந்த பல்கலைக்கழகம் திடீரென்று டிரெண்ட் ஆவதற்கு முக்கிய காரணம் அங்கு உலா வரும் ஒற்றை அணில் தான். வேண்டாம்.. வேண்டாம்.. அணில் என சொல்வதை விட 'சைக்கோ' அணில் என கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். என்னடா அணிலை போய் 'சைக்கோ' என்கிறார்களோ இரக்கமில்லையா உனக்கு? என கரிச்சு கொட்டாதீங்க. இந்த செய்தியை முழுவதுமாக படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.. ஏன் 'சைக்கோ' என்கிறார்கள் என்று.

'தம்மாத்துண்டு ஆங்கர் தான்டா அவ்வளவு பெரிய கப்பலையை நிறுத்துது'' இது வடசென்னை படத்தில் நடிகர் தனுஷ் சொல்லும் வசனம். இந்த வசனத்துக்கு ஏற்ப ''தம்மாத்துண்டு அணில் தான்டா மொத்த பல்கலைக்கழகத்தையும் அலறவிடுது'' என்பதற்கு பொருத்தமாக ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் கேம்பஸின் அழகுக்காகவும், நிழலுக்காகவும் ஆங்காங்கே மரம், செடிகள் வளர்த்துள்ளனர். இதனால் அங்கு அணில்களின் நடமாட்டம் உண்டு. மரம் இருந்தால் அணில் வரத்தானே செய்யும் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் பல்கலைக்கழக்கத்தில் உலா வரும் அணில் சாதாரண அணில் இல்லை. பெரிய 'டான்'.

இந்த அணில் மாணவர்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள், ஊழியர்கள் என யாரையும் விட்டு வைப்பது இல்லை. அவர்களையும் கடித்து வைக்கிறது. தம்மாத்துண்டு உருவம் இது என்ன செய்து விடப்போகிறது என பாவம் பார்த்த பல மாணவர்கள்- பேராசிரியர்களுக்கு 'கடி' கிடைத்தது தான் மிச்சம்.

இந்த அணில் தன்னுடைய கண்களில் மாட்டுற எல்லோரையும் ஓடி ஓடி கடிக்குது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 20 பேரை அது கடிச்சு வச்சிருக்காம்.
அணிலிடம்

கடி வாங்குன 20 பேரும் பயந்து போய் ஹாஸ்பிட்டலுக்கு ஓடிருக்காங்க. அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அணில் கடி என அலட்சியம் காட்டவில்லை. ரொம்ப சீரியஸாக எடுத்து கொண்டு 'ரேபிஸ்' வராம இருக்க ஊசி போட்டுக்கிட்டு ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கிறார். ஆமா, அணில் கடித்தாலும் ரேபிஸ் பரவும் தானே. அதனை தடுக்க தான் இந்த ஊசி.

இந்த சம்பவத்தை கேள்விபட்ட பிற மாணவர்கள், பேராசிரியர்கள் இப்போது கேம்பஸில் அணிலை பார்த்தாலே பயந்து ஓடுறாங்க. அணிலுக்கு போய் இப்படி பயப்பட வேண்டியதா இருக்கேன்னு புலம்பினாலும் அதன் கடிக்கு பயந்து ஓட்டம் பிடிக்கின்றனராம். பலரும் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து செல்லவே பயப்படுகிறார்களாம்.

இப்படி அலப்பறை பண்ணும் இந்த அணிலை பிடிக்க ஆங்காங்கே 'பொறி' வைத்து அணில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 'சைக்கோ' அணிலோ 'சில்வண்டு சிக்கும்.. ஆனால் இந்த அணில் சிக்காதுடா'' என டிமிக்கி கொடுத்து சுற்றி வருகிறது. இப்படி 'அட்ராசிட்டி' செய்யும் இந்த அணில் இன்னும் சிக்கவில்லை. இப்படியாக மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் 'டான்' ஆக வலம் வரும் இந்த அணில் சிக்குமா? அணிலிடம் இருந்து மாணவர்கள் - பேராசிரியர்கள் தப்பிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதும் 'பாம்பை கண்டால் படையே நடுங்கும்'' என்பார்கள். ஆனால் இந்த பல்கலைக்கழகத்தில் அணிலை கண்டாலே மாணவர்கள் - பேராசிரியர்கள் அனைவரும் ஓட்டம் பிடிக்கின்றனர். இப்போது சொல்லுங்கள் இந்த அணிலை என்ன சொல்வது என்று?.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+