Income Tax: வருமான வரியில் 100% அபராதம் முதல் விபத்து காப்பீடு வரை! டாப் 11 அறிவிப்புகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026- 2027- ஆம் நிதியாண்டுக்காக இன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை காணலாம்.

வருமான வரி தொடர்பாக 11 அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார்.

Income Tax

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்றைய தினம் தாக்கலானது. இந்த பட்ஜெட்டை தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

அதில் பட்ஜெட்டின் இதய பகுதியை வாசிப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

அதில் 11 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  1. தனி நபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை (இது வருமானதாரர்களுக்கு ஏமாற்றமான விஷயம்தான்).
  2. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது அசையா சொத்து விவரங்களை மறைத்தால் அபராதம். வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்
  3. எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் படிவம் விரைவில் வெளியிடப்படும். இதனால் சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும் படி எளிமையாக்கப்படுகிறது.
  4. விபத்துக் காப்பீடு மூலம் கிடைக்கும் தொகைக்கு வருமான வரி விலக்கு
  5. மருத்துவம், கல்விச் செலவுக்கான வரி பிடித்தம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறையும்.
  6. ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தொடரும்.
  7. வருமான வரிக் கணக்கில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 31 இல் இருந்து மார்ச் 31 ஆக நீட்டிக்கப்படுகிறது. ஐடிஆர்1, ஐடிஆர் 2 படிவங்களை பயன்படுத்தும் தனி நபர்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
  8. தணிக்கைக்கு உள்படாத வணிக நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.
  9. வருமான வரி தாக்கல் தொடர்பான சிறு குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை. வருமான வரி சார்ந்த குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் விதிக்கப்படும்.
  10. புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
  11. வெளிநாட்டு பயண திட்டங்களுக்கான டிசிஎஸ் வரி 20-ல் இருந்து 2 சதவீதமாக குறைப்பு.

இத்தகைய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தனி நபர் வருமான வரி மாற்றமில்லாததால் ஏற்கெனவே இருந்த நடைமுறையை காணலாம்.

அதாவது, ரூ. 4 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வரி இல்லை. ரூ 4 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை இருந்தால் 5 சதவீதமும், ரூ 8 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரை இருந்தால் 10 சதவீதமும் ரூ 16 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை இருந்தால் 20 சதவீதமும், ரூ 20 லட்சம் முதல் ரூ 24 லட்சம் வரை இருந்தால் 25 சதவீதமும், ரூ 24 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும். இவற்றை எல்லாம் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் வாசித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+