வருமான வரி செலுத்துபவரா நீங்க? அப்ப "இந்த" லிங்க் மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க.. மத்திய அரசு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி தாக்கல் வசதி ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.. இதை வருமானவரித்துறை அறிவித்துள்ளது.. அந்தவகையில், படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் வருமானவரித்துறை முறையாக செலுத்தப்படுவது அவசியமாகும்.. அந்தவகையில், 2022-23ஆம் நிதியாண்டுக்கு வருமான வரித் தாக்கலை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்...

income tax payer: are you a tax payer, please do not click this link, central government warning

பொதுமக்கள்: இதற்காகவே, பொதுமக்கள் வசதிக்காக, தற்போது வருமான வரி துறை ஐடிஆர் 1 (ITR) மற்றும் ஐடிஆர் 4 (ITR 4) படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதியை தொடங்கியுள்ளது. ஐடிஆர் 1 மற்றும் 4 படிவங்கள் மாத சம்பளம் வாங்குபவர்கள், மூத்த குடிமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் ஆகியோர் இந்த படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

யாருக்கு ஐடிஆர் 1: ஐடிஆர் 1 படிவத்தை மாத சம்பளம் வாங்குவோர், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தனிநபர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

மருத்துவர்கள்: ஐடிஆர் 4: (ITR 4): ஐடிஆர் 4 படிவத்தை ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தொழில் முனைவோர், தொழில்முறையாளர்கள், (professionals) தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாளர்கள் என கூறப்படும்.

இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். படிவம் 1-ஐ மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். படிவம் 2-ஐ, வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர், ரூ.50 லட்சத்துக்கு மிகாத ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்கிறார்கள்.

எச்சரிக்கை ட்வீட்: இந்நிலையில், மத்திய அரசு வரி செலுத்துவது சம்பந்தமான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதுகுறித்து, மத்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைப்பு, ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளது.. அதில், மொபைல் போனில் வரும் சந்தேகத்திற்கிடமான வரி தொடர்பான செய்திகளில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று வரி செலுத்துவோருக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்த மோசடியில் வரி செலுத்துவோருக்கு வரி கட்டுவது தொடர்பான மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்வதால் போலி வருமான வரி இணையதளத்திற்கு திருப்பி விடப்படுகிறார்கள். இணையதளத்தில் தங்கள் வங்கி விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை உள்ளிட்டுவிட்டால், அவை பதிவு செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

income tax payer: are you a tax payer, please do not click this link, central government warning

புகார் எண்: இந்த மோசடி குறித்து https://cybercrime.gov.inஎன்ற இணையத்தளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று இணைய பாதுகாப்பு அமைப்பு மேலும் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+