டுபாக்கூர் அரசியல் கட்சிகளுக்கு போலி நன்கொடைகள்- நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு போலி நன்கொடைகள் கொடுத்த விவகாரத்தில் இன்று நாட்டின் பல மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் உரிய விதிகளைப் பின்பற்றாமல் நன்கொடையை பெற்றுக் கொண்டு வருமான வரி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் கோரியிருக்கின்றன.

Income Tax raids across India to unearth bogus donations to Political parties

ஆகையால் தேர்தல் ஆணையம் இத்தகைய முறைகேடுகள் மீது நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. முதல் கட்டமாக இம்மோசடிகளில் ஈடுபட்டதாக 87 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை தமது பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது தேர்தல் ஆணையம்.

மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. இதனடிப்படையில்தான் இன்று 12 மாநிலங்களில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்தில் 2018-19-ல் பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத 199 அரசியல் கட்சிகள் ரூ445 கோடி வருமான வரி விலக்கு கோரியிருந்தன. இது 2019-2020ம் ஆண்டில் ரூ608 கோடியாகவும் அதிகரித்தது. இதில் 66 பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மட்டும் ரூ 385 கோடி வருமான வரி விலக்கு கோரின. ஆனால் இத்தகைய வருமான வரி விலக்குக்கான உரிய ஆவணங்களை அந்த கட்சிகள் தாக்கலும் செய்யவில்லை என தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+