சென்னை: நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று எழுச்சியுடனும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சென்னை கோட்டையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடி ஏற்றுவது 11-வது முறையாகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, 'விக்சித் பாரத்' என்ற சிந்தனையோடு கொண்டாடப்படுகிறது.
78-வது சுதந்திர தினம் விக்சித் பாரத் @2047 என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். 2047 ஆம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகரில் மட்டும் பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் என தீவிர கண்காணிப்பு உள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
Aug 15, 2024, 9:47 am IST
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் நிறைவடைந்தன.
Aug 15, 2024, 9:47 am IST
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
Aug 15, 2024, 9:40 am IST
9 பேருக்கு நல் ஆளுமை விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 9:40 am IST
வயநாட்டில் உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது; முதல்வர் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Aug 15, 2024, 9:39 am IST
சந்திரயான்- 3 விண்கல திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:31 am IST
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு ரூ10 லட்சம் காசோலையுடன் தகைசால் தமிழர் விருது வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 9:31 am IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:30 am IST
நம்மைக் காப்போம்! நாட்டைக் காப்போம்! அனைவருக்கும் விடுதலை நாள் நல் வாழ்த்துகள்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:27 am IST
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழித்தோன்றல் மட்டுமல்ல.. வழிவழி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் அளித்து வரும் வெற்றிக்கு தலைவணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவோம்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:27 am IST
இயற்கை பேரிடர் பாதிப்புகள் தொடர்பாக நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட மலைகளில் முறையாக ஆய்வு செய்யப்படும்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:27 am IST
தியாகிகள் ஓய்வூதியம் 21,000 ஆக உயர்வு- முதல்வர் ஸ்டாலின்
தியாகிகள் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ரூ11,500 ஆக உயர்வு- முதல்வர் ஸ்டாலின்
சுதந்திர போராட்ட வீரர் குடும்பங்களின் சிறப்பு ஓய்வுதியம் ரூ10,500 ஆக உயர்வு
Aug 15, 2024, 9:25 am IST
பரந்தூர் விமான நிலையம், குலசேகரப்பட்டினம் விண்வெளி தொழிற்பூங்கா உள்ளிட்ட உருவாக்கப்பட இருக்கும் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 9:20 am IST
65,000 இளைஞர்களுக்கு அரசு பணி கொடுக்கப்பட்டுள்ளது. 16 மாதங்களில் 75,000 அரசு பணிகள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:20 am IST
திமுக ஆட்சிக் காலத்தில் 3 ஆண்டுகால திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பொருளாதார திட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை விவரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 9:20 am IST
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன், நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம். இந்தியத் திருநாடு வாழியவே.. தமிழ்நாடு வாழியவே.. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன்,
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 15, 2024
Aug 15, 2024, 9:16 am IST
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான நினைவு மண்டபங்களை பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின். பெண்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கான நலத் திட்டங்களையும் பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்; எந்த மாநிலமும் செய்யாத வகையில் தியாகிகளைப் போற்றுகிறோம்- 3 ஆண்டுகளில் தமிழ்நாடு பல்துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Aug 15, 2024, 9:16 am IST
300 ஆண்டுகளாக விடுதலைக்காக போராடினோம்; வீர தீர தியாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வீரவணக்கம் செலுத்துவோம்; என்றும் வீரத் தியாகிகளை நினைவுகூருவோம்- நினைவுச் சின்னங்கள் மூலம் அவர்களை போற்றுகிறோம்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
50 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என்பதற்கான போராட்டம். அவர்தம் வழியில் அவரது நூற்றாண்டு விழாவில் 4-வது ஆண்டாக தேசியக் கொடி ஏற்றியதில் பெருமை அடைகிறேன்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
விடுதலை நாள்- அரசியல் விடுதலை நாள் மட்டுமல்ல- பண்பாட்டு விழாவாக இந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல. ஆனந்தமான இந்தியாவை அடைய திட்டமிடும் நாளாக கொண்டாடுகிறோம். - முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
காந்தியின் அறவழிப் போராட்டத்தில் தமிழகம் கை கோர்த்து நின்றது; எண்ணற்ற தியாகத்தால் விடுதலைக் காற்றை சுவாசித்தோம். 77 ஆண்டுகளைக் கடந்து விட்டது விடுதலை இந்தியா. தியாகிகள் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி வளர்க்கிறோம். ஒருமைப்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சியை காட்டுகிறோம்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
பல்லாண்டு கால போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த சுதந்திரம். ரத்தத்தையே வியர்வையாக தந்தனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றவர்கள் தமிழர்கள். உயிரையே கொடுத்து இந்த தமிழ் மண்ணில் மாண்டவர்கள் தமிழர்கள்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 9:16 am IST
நாட்டு மக்கள் அனைவருக்கும் என விடுதலை நாள் வாழ்த்துகள்- தியாகிகளைப் போற்றுவோம்- அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்போம். அவர்களது நோக்கம் நிறைவேற உழைப்போம் என உறுதியேற்போம்- முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2024, 8:55 am IST
சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும், வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களையும், தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம். எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையை கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 8:55 am IST
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2024, 8:24 am IST
நாடு முழுவதும் சுய உதவிக்குழுக்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். சுற்றுலா, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன- பிரதமர் மோடி உரை
Aug 15, 2024, 8:24 am IST
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். 40 கோடி மக்கள் இணைந்து பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றினார்கள். இன்று 140 கோடி மக்கள் இணைந்து இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை
Aug 15, 2024, 7:59 am IST
சுதந்திர போராட்ட வீரர்களை போலவே நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். தற்போது 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக முடியும் - பிரதமர் மோடி உரை
READ MORE
7:57 AM, 15 Aug
78வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
7:59 AM, 15 Aug
டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் மோடி கொடி ஏற்றினார்
7:59 AM, 15 Aug
நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்த நேரத்தில் போற்றுகிறேன்.விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடு பட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன் பட்டுள்ளோம் - பிரதமர் மோடி சுதந்திர தின உரை
7:59 AM, 15 Aug
சுதந்திர போராட்ட வீரர்களை போலவே நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். தற்போது 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக முடியும் - பிரதமர் மோடி உரை
8:24 AM, 15 Aug
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். 40 கோடி மக்கள் இணைந்து பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றினார்கள். இன்று 140 கோடி மக்கள் இணைந்து இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை
8:24 AM, 15 Aug
நாடு முழுவதும் சுய உதவிக்குழுக்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். சுற்றுலா, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன- பிரதமர் மோடி உரை
8:55 AM, 15 Aug
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
8:55 AM, 15 Aug
சென்னை கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
8:55 AM, 15 Aug
சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும், வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களையும், தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம். எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையை கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் என விடுதலை நாள் வாழ்த்துகள்- தியாகிகளைப் போற்றுவோம்- அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்போம். அவர்களது நோக்கம் நிறைவேற உழைப்போம் என உறுதியேற்போம்- முதல்வர் ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
பல்லாண்டு கால போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த சுதந்திரம். ரத்தத்தையே வியர்வையாக தந்தனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றவர்கள் தமிழர்கள். உயிரையே கொடுத்து இந்த தமிழ் மண்ணில் மாண்டவர்கள் தமிழர்கள்- முதல்வர் ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
காந்தியின் அறவழிப் போராட்டத்தில் தமிழகம் கை கோர்த்து நின்றது; எண்ணற்ற தியாகத்தால் விடுதலைக் காற்றை சுவாசித்தோம். 77 ஆண்டுகளைக் கடந்து விட்டது விடுதலை இந்தியா. தியாகிகள் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி வளர்க்கிறோம். ஒருமைப்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சியை காட்டுகிறோம்- முதல்வர் ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
விடுதலை நாள்- அரசியல் விடுதலை நாள் மட்டுமல்ல- பண்பாட்டு விழாவாக இந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல. ஆனந்தமான இந்தியாவை அடைய திட்டமிடும் நாளாக கொண்டாடுகிறோம். - முதல்வர் ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
50 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என்பதற்கான போராட்டம். அவர்தம் வழியில் அவரது நூற்றாண்டு விழாவில் 4-வது ஆண்டாக தேசியக் கொடி ஏற்றியதில் பெருமை அடைகிறேன்- முதல்வர் ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
300 ஆண்டுகளாக விடுதலைக்காக போராடினோம்; வீர தீர தியாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வீரவணக்கம் செலுத்துவோம்; என்றும் வீரத் தியாகிகளை நினைவுகூருவோம்- நினைவுச் சின்னங்கள் மூலம் அவர்களை போற்றுகிறோம்- முதல்வர் ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
9:16 AM, 15 Aug
சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்; எந்த மாநிலமும் செய்யாத வகையில் தியாகிகளைப் போற்றுகிறோம்- 3 ஆண்டுகளில் தமிழ்நாடு பல்துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:16 AM, 15 Aug
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான நினைவு மண்டபங்களை பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின். பெண்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கான நலத் திட்டங்களையும் பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின்
9:20 AM, 15 Aug
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன், நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம். இந்தியத் திருநாடு வாழியவே.. தமிழ்நாடு வாழியவே.. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன்,
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 15, 2024
9:20 AM, 15 Aug
திமுக ஆட்சிக் காலத்தில் 3 ஆண்டுகால திட்டங்கள், வேலைவாய்ப்புகள், பொருளாதார திட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை விவரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:20 AM, 15 Aug
65,000 இளைஞர்களுக்கு அரசு பணி கொடுக்கப்பட்டுள்ளது. 16 மாதங்களில் 75,000 அரசு பணிகள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின்
9:25 AM, 15 Aug
பரந்தூர் விமான நிலையம், குலசேகரப்பட்டினம் விண்வெளி தொழிற்பூங்கா உள்ளிட்ட உருவாக்கப்பட இருக்கும் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:27 AM, 15 Aug
தியாகிகள் ஓய்வூதியம் 21,000 ஆக உயர்வு- முதல்வர் ஸ்டாலின்
தியாகிகள் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ரூ11,500 ஆக உயர்வு- முதல்வர் ஸ்டாலின்
சுதந்திர போராட்ட வீரர் குடும்பங்களின் சிறப்பு ஓய்வுதியம் ரூ10,500 ஆக உயர்வு
9:27 AM, 15 Aug
இயற்கை பேரிடர் பாதிப்புகள் தொடர்பாக நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட மலைகளில் முறையாக ஆய்வு செய்யப்படும்- முதல்வர் ஸ்டாலின்
9:27 AM, 15 Aug
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழித்தோன்றல் மட்டுமல்ல.. வழிவழி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் அளித்து வரும் வெற்றிக்கு தலைவணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவோம்- முதல்வர் ஸ்டாலின்
9:30 AM, 15 Aug
நம்மைக் காப்போம்! நாட்டைக் காப்போம்! அனைவருக்கும் விடுதலை நாள் நல் வாழ்த்துகள்- முதல்வர் ஸ்டாலின்
9:31 AM, 15 Aug
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
9:31 AM, 15 Aug
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு ரூ10 லட்சம் காசோலையுடன் தகைசால் தமிழர் விருது வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:39 AM, 15 Aug
சந்திரயான்- 3 விண்கல திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
9:40 AM, 15 Aug
வயநாட்டில் உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது; முதல்வர் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
78th Independence Day PM Modi Speech in Tamil news live updates: (78வது சுதந்திர தினம் லைவ் 2024): The 78th Independence Day of the country is being celebrated today. The 78th Independence Day is being celebrated with the theme Vixit Bharat @2047. It aims to make India a developed country by 2047.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.