உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு!
நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 73 வருடங்கள் ஆகிவிட்டது. இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று அணிவகுப்பு நடக்க உள்ளது.

உரை
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 100 லட்சம் கோடி செலவு செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவின் தோற்றமே மாறும். ரயில்வே, விமானத்துறை, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தமாக புதுப்பிக்கப்படும் நாம் வேகமாக முன்னேற வேண்டும்.

மோடி பேச்சு
இதற்காக மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம். இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைய முடியும். கடந்த 70 வருடங்களில் நாம் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியுள்ளோம். அதனால் நாம் அடுத்து ஐந்து வருடத்தில் மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும்.

வேலை வாய்ப்பு
அதன் பின் அதை நாம் 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் நாம் வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள். கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு

ரயில் நிலையம்
சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடற்கரையை தாண்டி கடல்நடுவே துறைமுகங்களை கட்டமைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது; சர்வதேச நாடுகளின் தரத்திற்கு இணையாக இந்தியாவை மேம்படுத்த வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications