"அஸ்திரத்தில்” கைவைக்கும் ‘இந்தியா’.. வாக்குப்பதிவு இயந்திரம்! மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு
டெல்லி: மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சை பற்றி ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்து உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே அது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சி அமைத்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான பலர் குரல் உயர்த்தினர். குறிப்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தனர்.

பல இடங்களில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு விழுவதாக புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என வீடியோக்களையும் வெளியிட்டது. இதனை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் ஆணையம், அதை சரிகட்ட ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை அறிமுகம் செய்தது.
இருப்பினும் அதன் மீது பலருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரச்சனையை கையில் எடுத்து உள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என்சிபி, ஆர்ஜேடி, ஜேடியு, மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கின.
இதன் முதல் கூட்டம் ஜூன் மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில்தான் இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு வைத்தார்கள். இந்த கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதற்காக பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு வரும் இந்த கூட்டணி தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரச்சனையை கையில் எடுத்து இருக்கிறது. மும்பையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி 2 நாட்கள் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் 3வது அமர்வில் இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மாற்றாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு உட்பட பல்வேறு குழுக்களும் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications