நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கனும்! இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
டெல்லி: நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்தியா கூட்டணி எம்பிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்திய அரசியலமைப்பின் மத சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக ஜி ஆர் சுவாமிநாதன் முடிவு எடுப்பதாக கூறி நேற்று அவரை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மான நோட்டீசை சபாநாயகரிடம் கொடுத்திருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேயே இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோருவது தொடர்பாக திமுக அடங்கியுள்ள இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து அவரை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்காக கூட்டணிக் கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இந்த தீர்மானத்தில் பிரியங்கா காந்தி உள்பட 107 எம்பிக்கள் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் இந்த கையெழுத்துகள் அடங்கிய தீர்மான நோட்டீசை பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் தொல் திருமாவளவன், துரை வைகோ முன்னிலையில் திமுக எம்பிக்கள், கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோர் சபாநாயகர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து கொடுத்தனர்.
இந்த நோட்டீஸில், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இந்திய அரசியலமைப்பின் மத சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக முடிவெடுப்பதாகவும், இவரது நடத்தை நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மீது கேள்விகளை எழுப்புவதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications