டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெம்டெசிவர் மருந்து.. எகிப்து, இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான், வங்கதேசத்தை அணுகும் இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த கிளிட் சயின்ஸ் நிறுவனம் தனது ரெம்டெசிவர் மருந்தை 45000 குப்பிகள் அளவிற்கு இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதனிடையே இந்திய அரசு, எகிப்து, உஸ்பெகிஸ்தான், பிரிட்டன் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ரெம்டெசிவர் மருந்தை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

Recommended Video

    Remdesivir மருந்து யாருக்கெல்லாம் தேவைப்படும்? தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்? முக்கிய தகவல்கள்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது இதையடுத்து இந்திய நிறுவனங்கள் ரெம்டெசிவர் மருந்தை இறக்குமதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.

    முன்னதாக மத்திய அரசு ரெடெசிவர் மருந்திற்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது. அத்துடன் மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களுக்கும் வரிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்து வரும் கிளிட் சயின்ஸ் நிறுவனம் இந்தியாவிற்கு 45000 குப்பிகள் அளவிற்கு அன்பளிக்காக தர முடிவு செய்துள்ளது. அத்துடன் உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களையும் தர முடிவு செய்துள்ளது.

    ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்தா? உண்மையும் கட்டுக்கதையும்! ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்தா? உண்மையும் கட்டுக்கதையும்!

    முதலில் மறுப்பு

    முதலில் மறுப்பு

    இதனிடையே அமெரிக்கா, இந்தியாவிற்கு தேவையான ஆக்ஸிஜன் தடுப்பூசிக்குக்கு தேவையான மூலப்பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. இவை வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்கா, இந்தியாவிற்கு அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை தர மறுத்தது. ஆனால் பாதிப்பு மிக மோசமாக மாறியதை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் இந்தியாவிற்கு உதவிகளை உடனடியாக செய்துள்ளது அமெரிக்கா.

    இந்தியாவிற்கு உதவி

    இந்தியாவிற்கு உதவி

    இதனிடையே தயார் நிலையில் உள்ள தடுப்பூசிகளை தந்து உதவுமாறு இந்தியா எங்களிடம் கேட்கவில்லை என்று அமெரிக்க அதிகாரி அண்மையில் சுட்டிக்காட்டினார். ஆனால் இந்தியாவின் தடுப்பூசி தேவை குறைந்தது இரண்டு முறை அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தனது சொந்த தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, அமெரிக்கா ஏற்கனவே வைத்திருக்கும் 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவையும், மேலும் 50 மில்லியன் டோஸ்கள் அங்கு உற்பத்திக்கு கிடைக்க உள்ளது. இதையடுத்து இந்தியா கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்த்தது,

    இந்தியா திட்டம்

    இந்தியா திட்டம்

    ஆனால் சர்வதேச உதவி கேட்டு இந்தியா எந்த முறையீடும் வெளியிடவில்லை. நாட்டின் ஆக்சிஜன் நிலைமையை எளிதாக்க உதவும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் செறிவூட்டிகள் கருவிகளை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்வதும், ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை இறக்குமதி செய்வதும் இந்தியாவின் முக்கிய திட்டமாக உள்ளது.

    ஆக்ஸிஜன் உதவி

    ஆக்ஸிஜன் உதவி

    இந்தியா பொதுவாக ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்கிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் வடிவில் உதவி வழங்குகின்றன, அவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆதரவுடன் விநியோகிக்கப்படுகிறது. .
    தனியார் துறையின் உதவியைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டு மன்றம் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அதன் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா.

    English summary
    While US pharma giant Gilead Sciences has agreed to provide 450,000 vials of Remdesivir, the government is also looking to procure it from countries like Egypt, Uzbekistan, UAE and Bangladesh. Official sources said Indian missions in these countries are working to facilitate purchase of the Covid-19 drug which remains in high demand in India as the pandemic runs riot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X