இதுதான் கேம் சேஞ்சர்.. இதயத்தில் அடித்த இந்தியா.. சரண்டராக ஓடி வந்த பாகிஸ்தான்.. விஷயமே வேற தெரியுமா
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாகவே நீடித்து வந்தது. நேற்றைய தினம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா இறங்கி அடித்தது. குறிப்பாகக் குறிப்பாக நூர் கான் விமானத் தளத்தைக் குறிவைத்து பாகிஸ்தான் அடித்தது. அதன் பிறகே வேறு வழியில்லாமல் சண்டையை நிறுத்த சொல்லி பாகிஸ்தான் ஓடி வந்துவிட்டது. இந்த நூர் கான் விமானத் தளம் ஏன் முக்கியம்..! இந்த ஏர் பேஸில் இந்தியா கை வைத்ததும் பாகிஸ்தான் ஏன் போரை நிறுத்த ஓகே சொன்னது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் தொடங்கி பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து பாக். ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்தியா ட்ரோன்களை வீழ்த்த மட்டுமே செய்தது. முதல் இரண்டு நாட்கள் திரும்பத் தாக்கவில்லை. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மிக வலிமையாக இருந்ததால் பாகிஸ்தானின் ஒரு ஏவுகணை கூட உள்ளே வரவில்லை.

ஆட்டத்தை மாற்றிய இந்தியா
ஆனால், நேற்றைய தினம் இந்தியா பதிலடி கொடுக்க தொடங்கியது. குறிப்பாக பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து இந்தியா இறங்கி அடித்தது. பாகிஸ்தானில் உள்ள சக்லாலா ஏர் பேஸ், முரிட் ஏர் பேஸ் (சக்வால்), ரஃபிகி ஏர் பேஸ் (ஷோர்கோட்), ரஹீம் யார் கான் ஏர் பேஸ் (தெற்கு பஞ்சாப்), சுக்கூர் ஏர் பேஸ் / பாஃப் பேஸ் போலாரி, சூனியன் ஏர் பேஸ் எனப் பல இடங்களில் தாக்குதல் நடத்தியது. அதாவது தற்காப்பு என்பதை தாண்டி பதிலடி கொடுத்தது.
இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். அதாவது பாகிஸ்தானால் வடக்கே எல்லையைத் தாண்டித் தாக்குதலை நடத்த முடியவில்லை. ஆனால், இந்தியா கிட்டத்தட்ட பாகிஸ்தான் முழுக்க தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் எங்கு வேண்டுமானாலும் தாக்க முடியும் என்பதை நிரூபித்தது. பாகிஸ்தானில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், ரேடார் அமைப்புகள், கமாண்ட் சென்டர்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
கேம் சேஞ்சர்
அதில் குறிப்பாக நூர் கான் விமானப் படைத்தளம் மீது இந்தியாவின் தாக்குதல் தான் கேம் சேஞ்சர். இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போய்விட்டது என்பதே உண்மை. ஏனென்றால் இந்த விமானப்படைத் தளம் என்பது பாகிஸ்தானின் ராணுவ தலைமையிட வளாகத்தில் அமைந்துள்ளது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையிட வளாகத்தில் உள்ள இந்த நூர் கான் விமானப் படைத்தளம் மீது கனகச்சிதமாகத் தாக்குதலை முடித்தது இந்தியா!
மரண அடி கொடுத்த இந்தியா
பாகிஸ்தான் ராணுவ தலைமையிடம் மட்டுமில்லை.. இந்தப் படைத்தளம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகே அமைந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து இந்தத் தாக்குதல் நடந்த இடத்திற்கு வெறும் 10 கி.மீ தான். மேலும் பாகிஸ்தானின் முக்கிய தலைவர்கள் தங்கள் பயணங்களுக்கும் இந்த விமானப்படைத் தளத்தைப் பயன்படுத்துவார்கள். விமானப் பயிற்சிக் கல்லூரி, எரிபொருள் மையம் எனக் கிட்டத்தட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் இதயத்திலேயே இந்தியா மரண அடி கொடுத்தது.
ஓடி வந்த பாகிஸ்தான்
இதுதான் கேம் சேஞ்சராக இருந்தது. அதாவது இந்தியாவின் ஒரு பகுதியைக் கூட பாகிஸ்தானால் தாக்க முடியாத நிலையில், இஸ்லாமாபாத்திற்கு அருகே பாகிஸ்தான் ராணுவ தலைமையிடத்திலேயே இந்தியா தாக்கியது. இதே நிலை தொடர்ந்தால் நிலைமை மிக மோசமாகச் செல்லும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்தது. இதன் காரணமாகவே பாகிஸ்தானைப் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் எனத் தூது விட்டு சரண்டர் ஆனது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications