India Pakistan War: அடுத்த கட்டத்திற்கு போகும் டென்ஷன்! இந்திய எல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான்! இந்தியா ரெடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளுக்கு தங்கள் படைகளை நகர்த்துவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எல்லை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது என்று இந்திய ராணுவம் சார்பாக ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு மட்டுமே இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவுடு பொடியாக்கியுள்ளது. அதிவேக ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது,.ஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து, பாகிஸ்தான் இன்று அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பியது.

India attacks on top cities of Pakistan including Islamabad Lahore Army to meet press

மருத்துவமனைகள், பள்ளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன, பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சிகள் தவிடுபொடியாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் ஆயுதக் கிடங்குகளை பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஸ்ரீநகர் முதல் சாலியா வரை 26 இடங்களை பாக். குறி வைத்தது. ஆதன்பூர், பதான்கோட் ராணுவ தளங்களுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணை தளத்திற்கு எந்த சேதமும் இல்லை. பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து அதிகாலை 1.40 மணி அளவில் அதிவேக ஏவுகணைகளை அனுப்பியது பாகிஸ்தான். துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை பயன்படுத்தி இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.என்று இந்திய ராணுவம் சார்பாக ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்

1. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரை இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதை இந்தியா உடனுக்குடன் தடுத்தது.

2. ஸ்ரீநகர் அருகே 6-7 ட்ரோன்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்ரீநகரில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.

3. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

4. இதையடுத்து இன்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இருதயம் போன்ற நகரம் ஆகும். அரசியல் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் அரசியலை நிர்ணயிப்பதே லாகூர்தான். லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

India attacks on top cities of Pakistan including Islamabad Lahore Army to meet press

5. அதேபோலம் ராவல்பிண்டியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் பகுதி ஆகும். பாகிஸ்தானின் மிக முக்கிய ராணுவ தளவாடம் ஆகும். இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.

6. பாகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய இராணுவ விமானத் தளங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. சியால்கோட் மற்றும் நரோவலில் உள்ள பாகிஸ்தான் நிலைகளிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.

7. இந்தத் தாக்குதல்களில் இந்தியா வானிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

8. இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதைத்தான் இன்று தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளனர்.

9. பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை தடுத்து நிறுத்தியது இந்தியா பாதுகாப்பு படை. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.

10. இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

11. பாகிஸ்தானில் இருந்து வரும் ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. ஆனால் என்ன மாதிரியான ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டன என்ற முழு விபரங்கள் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+