வங்கதேசத்தை முடக்கும் இந்தியா.. மத்திய அரசு அதிரடி.. கதறும் முகமது யூனுஸ்.. அடிமேல் விழும் அடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுடன் அண்டை நாடான வங்கதேசம் மோதலை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து வங்கதேசம் நெருக்கம் காட்டி நம்மை சீண்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வங்கதேசத்துக்கு அடுத்தடுத்து நம் நாடு ‛செக்' வைத்து வருகிறது. அந்த வகையில் வங்கதேசத்தில் இருந்து சணல், துணிகள் உள்ளிட்டவற்றை நிலம் வழியாக நம் நாட்டுக்கு அனுப்ப தடை விதித்துள்ளது. இதனால் வங்கதேசம் சிக்கலில் சிக்கி உள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த வன்முறையில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

bangladesh india

இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தான், சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து எல்லையில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்றுவோம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டு வருகிறது.

இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது படிப்படியாக வங்கதேசத்துக்கு நம் நாடு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் நம் நாடும், வங்கதேசமும் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இந்த எல்லைகள் வழியாக நம் நாட்டில் இருந்து வங்கதேசத்துக்கும், வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்கும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

வங்கதேசத்தை எடுத்து கொண்டால் இந்த எல்லைவழி சாலைகள் வழியாக சணல் மற்றும் துணிகளை வங்கதேசம் அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறது. இதன்மூலம் வங்கதேச நிறுவனங்கள் பணம் சம்பாதித்து வந்தன. தற்போது எல்லை வழி சாலைகள் வழியாக சணல், துணி உள்பட பிற பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய நம் நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக நம் நாட்டின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், ‛‛வங்கதேசத்தில் இருந்து எல்லை வழி சாலைகள் வழியாக சணல், துணிகள் உள்பட பிற பொருட்களை இந்தியாவுக்குள் கொண்டு வரதடை விதிக்கப்படுகிறது. இந்த பொருட்களை வங்கதேசம் மகாராஷ்டிராவில் உள்ள நவா ஷேவா துறைமுகம் வழியாக மட்டுமே கொண்டு வர வேண்டும் அதேபோல் இது இந்தியா வழியாக நேபாளம், பூடான் செல்லும் வங்கதேச பொருட்களுக்கு பொருந்தாது. மாறாக இந்த பொருட்களை வங்காளதேசத்திலிருந்து நேபாளம் மற்றும் பூடான் கொண்டு சென்று அங்கிருந்து ஸ்டிக்கர் ஒட்டி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தில் துணி உள்பட ஜவுளி தொழில் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்கிறது. தற்போது இந்த உத்தரவால் அந்த நாட்டில் இருந்து நம் நாட்டுக்கு பொருட்களை கொண்டு வர வேண்டும் என்றால் கூடுதல் செலவு ஏற்படும். இது அந்த நாட்டின் வர்த்தகர்களை பாதிக்கும். இதன்மூலம் வங்கதேசத்தின் பொருளாதாரம் சரிவை எதிர்கொள்ளும். இது வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நம் நாட்டின் ஜவுளித்துறையை வளப்படுத்தும். ஏனென்றால் ஜவுளித்துறையில் வங்கதேசம் நம் நாட்டின் பெரிய போட்டி நாடாக உள்ளது. இது நம் நாட்டின் ஜவுளி மற்றும் துணி உற்பத்தியாளர்களின் தொழிலை ஊக்குவிக்கும்.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியா விதிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மே 17 ம்தேதி வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் உள்பட மேலும் சில பொருட்களுக்கு இந்தியாவுக்கு கொண்டு வர இதுபோன்று தடை விதிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக ஏப்ரல் 9 ம் தேதி மத்திய கிழக்கு, ஐரோப்பா, நேபாளம், பூடான் உள்பட பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பொருட்களை அனுப்புவதற்கான டிான்ஷிப்மென்ட்டை நம் நாடு திரும்ப பெற்றது. இதன்மூலம் நம்மை சீண்டும் வங்கதேசத்துக்கு அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் நம் நாடு அதிரடியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+