இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நீட் மூலமாகவே நடைபெறுகிறது. இருப்பினும், நீட் தேர்வு தொடர்பாகச் சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தாண்டு கூட நீட் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன விவகாரத்தில் கடந்த மாதம் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இந்த மாதம் நீட் நடைபெற உள்ளது.

Telegram app icon with restricted notification warning

முடக்கம்

இதற்கிடையே பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் செயலியை வரும் ஜூன் 22ம் தேதி வரை தற்காலிகமாக முடக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு காலத்திலும், அதற்கு அடுத்த நாளும் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க இந்தத் தடை அவசியம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

உத்தரவு

டெலிகிராம் செயலியை முடக்கியது மட்டுமல்லாமல், ஜூன் 30ம் தேதி வரை அதில் உள்ள மெசேஜ் எடிட்டிங் வசதியைச் செயலிழக்கச் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. மோசடி கும்பல்கள் ஏற்கனவே அனுப்பிய பழைய மெசேஜ்களை எடிட் செய்து, அதில் வினாத்தாள் பைல்ஸ் இணைக்கின்றனர்.

இதனால் வினாத்தாள் தேர்வுக்கும் முன்பே கசிந்துவிட்டது போன்ற ஒரு போலித் தோற்றத்தை அவர்களால் உருவாக்க முடிகிறது. பழைய நேரத்தைக் காட்டியே மாணவர்களை ஏமாற்ற இதைப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளது.

காரணம்

நீட் தேர்வை இலக்காகக் கொண்டு செயல்படும் மோசடி கும்பல்கள், டெலிகிராம் மூலம் மாணவர்களைத் தொடர்பு கொண்டு வினாத்தாள்களைத் தருவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றன. ஏற்கனவே இது தொடர்பாகப் பல சேனல்கள், குரூப்கள் மற்றும் பாட்கள் அதிகாரிகளால் நீக்கப்பட்டன. இருப்பினும், இந்தத் தளம் மூலம் தொடர்ந்து முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், தற்காலிகமாக ஒட்டுமொத்த தளத்தையுமே முடக்க முடிவு எடுத்துள்ளனர்.

இந்தத் தற்காலிகத் தடையால் லட்சக்கணக்கான சாதாரண டெலிகிராம் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தாங்கள் அறிவதாக NTA கூறியுள்ளது. இருப்பினும், நாட்டின் மிக முக்கியமான நுழைவுத் தேர்வின் நேர்மையைப் பாதுகாக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் மீது மட்டும் நடவடிக்கை ஏன்?

மற்ற செயலிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் டெலிகிராம் மீது மட்டும் ஏன் இந்த நடவடிக்கை என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.. அதாவது வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் ஒரு குழுவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களே இருக்க முடியும். ஆனால், டெலிகிராமில் லட்சக்கணக்கானோர் ஒரே குழுவில் இணைய முடியும். இது தகவல்களை மிக வேகமாகப் பரப்ப உதவுகிறது.

மேலும், டெலிகிராமில் ஒருவரின் போன் நம்பர் தெரியாமலேயே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இதனால் மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்குச் சவாலாக உள்ளது. மேலே குறிப்பிட்டது போல, ஒரு மெசேஜை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்து மாற்ற முடியும். இது வினாத்தாள் கசிவு போன்ற போலி ஆதாரங்களை உருவாக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பகிர உதவுகிறது

மிக அதிக அளவு கொண்ட பிடிஎஃப் மற்றும் வீடியோக்களை கூட எளிதாகப் பகிர டெலிகிராம் அனுமதிக்கிறது. இது வினாத்தாள்களைப் பரப்புவதற்கு வசதியாக அமைகிறது. டெலிகிராம் நிறுவனம் பெரும்பாலும் அரசின் டேட்டா கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் ஒத்துழைப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதனால் குற்றவாளிகளைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டே மத்திய அரசு இப்போது இந்த முடிவை எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+