கொரோனா தொற்று பாதிப்பில், சீனாவை முந்தியது இந்தியா.. 85000த்தை கடந்தது
டெல்லி: சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆயிரமாக உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிகை 85000த்தை தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சீனாவைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. மார்ச் 25ம் தேதி இந்தியாவில் 1000த்துக்கும் கீழ் என்ற அளவில் இருந்தது. அன்று முதல் தொடர்ந்து லாக்டவுன் இந்தியாவில் இருந்து வருகிறது. இதுவரை மூன்று முறை லாக்டவுன் நீடிக்கப்பட்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு வெறும் இரண்டு மாதத்தில் 85 ஆயிரமாக இந்தியாவில் உயர்ந்துள்ளது.

ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி. சீனாவில் 84031 பேருக்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4633 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 3549 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85546 ஆக உயர்ந்துள்து. இதுவரை இந்தியாவில் 2649 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 51500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 30000 ஆயிரம் பேர் மருத்துவனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 14லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 87430 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைக்கு உலகிலேயே மிக அதிகமான பாதிப்பு என்பது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இன்று மட்டும் 10598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவில் 236 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு என்பது மிகமிக குறைவு ஆகும். இதுவரை 2418 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications