பாகிஸ்தானை விட்டுதள்ளுங்க.. இந்தியாதான் அதுக்கு சரியான ஆள்! பாராட்டி தள்ளிய ரஷ்யா! நண்பேன்டா!
டெல்லி: அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனை பாகிஸ்தான் முன்னெடுத்திருக்கிறது. ஆனால், இதற்கு இந்தியாதான் சரியான ஆள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியிருக்கிறார்.
ஈரான் விஷயத்தில் அமெரிக்கா பாகிஸ்தானை நாடியிருக்கிறது. இப்போதைக்கு பாகிஸ்தான்தான் இரு நாடுகளுக்கும் மீடியேட்டர். ஆனால், பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. இப்போது வரை அமெரிக்காவுக்கும்-ஈரானுக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை.

ரஷ்யா சொன்னது என்ன?
இந்த நிலையில்தான், பேச்சுவார்த்தைக்கு இந்தியாதான் சரிப்பட்டு வரும் என்று ரஷ்யா கூறியிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேசியதாவது,
“தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய அரசியலில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது நிலவும் அவசரப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் பாகிஸ்தான் உதவி வருகிறது. புவிசார் ரீதியாக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் இருப்பதாலும், இஸ்லாமிய நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்பாலும் பாகிஸ்தான் இந்தத் தற்காலிகப் பணியைச் செய்கிறது.
இந்தியதான் கெத்து
ஆனால், அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு நீண்டகால மத்தியஸ்தராக செயல்பட இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் இருப்பதாக ரஷ்யா கருதுகிறது. இந்தியாவுக்கு அனைத்துத் தரப்பு நாடுகளுடனும் சமமான நட்புறவு உள்ளது. இந்தியா எப்போதுமே ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல், அமைதி வழியில் தீர்வுகாண முயலும் நாடு என்ற பிம்பத்தைக் கொண்டுள்ளது” என்று பேசியிருக்கிறார்.
இந்தியாவின் பங்கு
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடனான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா, இந்தியா போன்ற ஒரு நடுநிலையான நாடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை விரும்புகிறது. அணு ஆயுத ஒப்பந்தம் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் - அமெரிக்கா உறவு மோசமாக உள்ளது. இந்தியா இதில் தலையிட்டால், அது பிராந்திய அமைதிக்கு குறிப்பாக எரிசக்தி மற்றும் வர்த்தகப் பாதுகாப்பு பெரும் உதவியாக இருக்கும். எனவேதான் ரஷ்யா இந்தியாவை நாடுகிறது.
மறுபுறத்திலிருந்து பார்த்தால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரான் - அமெரிக்கா மோதலைத் தீர்ப்பது இந்தியாவின் சுய நலனுக்கும் எரிபொருள் விலை குறைப்புக்கும் மிகவும் அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications