3 விஷயம் முக்கியம்.. தேர்தல் ஆணையத்திற்கு படையெடுத்த இந்தியா கூட்டணி கட்சிகள்.. வைத்த கோரிக்கை என்ன?
டெல்லி: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். 3 விஷயங்களை வலியுறுத்தி தேர்தல ஆணையத்திடம் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்தனர்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஜூன் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பிறகு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது: - மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். வாக்குக் எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதன்பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறோம். தபால் வாக்கு முடிவை தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை அறிவிப்பது சட்டத்துக்கு எதிரானது.
தேர்தல் ஆணையத்துக்கு திடீரென சென்ற பாஜக.. இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நிர்மலா தலைமையில் மனு
நாங்கள் வைத்த கோரிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பொறுமையுடன் கேட்டுக்கொண்டர்கள். நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார். அதேபோல திமுக எம்பி டி.ஆர் பாலு கூறுகையில், 'வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதி காலையில் நடைபெற உள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
தபால் வாக்குகளை எண்ணும் முன்பாக இவிஎம் இயந்திரங்களை எடுத்துவிடலாம் என்ற திடீரென ஒரு அறிவுறுத்தல் வந்தது. உடனடியாக திமுக சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது. இவிஎம் வாக்குகளை எண்ணும் முன்பாக தபால் வாக்கு எண்ணிக்கையை எண்ண வேண்டும் என இன்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications