இந்தியா கூட்டணி 272-க்கும் அதிகமான இடங்களில் வெல்லும்- யார் பிரதமர் தெரியுமா? ஜெய்ராம் ரமேஷ் புதிர்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் "இந்தியா" கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 272-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவை என்பது 272-க்கும் அதிகமான இடங்கள். ஆகையால்தான் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்கள் அதாவது 273 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்கிறோம்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் இணைந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பல்டி அடிப்பதில் மாஸ்டராக திகழ்பவர். 2019-ம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தவர் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. பாஜக கூட்டணியில் இருந்து விலகும் கட்சிகளை இந்திஆ கூட்டணியில் இணைப்பது தொடர்பாக கார்கே, சோனியா, ராகுல் காந்தி முடிவெடுப்பர். பாஜக கூட்டணியில் உள்ள நேர்மையான, மனிதாபிமான கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வரலாம். கதவுகள் திறந்தே இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சியில் எந்தவித பழிவாங்கலும் இருக்காது என்பதை உறுதியாக சொல்வோம்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் தியானம் செய்கிறார். இதே கன்னியாகுமரியில்தான் ராகுல் காந்தி தமது பாரத் ஜோடோ யாத்திரையையும் தொடங்கினார். லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின்னர் மோடி, நீண்டகாலம் தியானம்தான் செய்யப் போகிறார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பதை 2 நாட்களில் அதாவது 48 மணிநேரத்தில் முடிவு செய்வோம். சோனியா காந்தி பிரதமராக மறுத்த போது 3 நாட்களிலேயே மன்மோகன்சிங் பிரதமர் என முடிவெடுத்திருக்கிறோம். அதனால் யார் பிரதமர் என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
லோக்சபா தேர்தலில் பாஜக 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்பது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் நம்பிக்கை. ஆனால் 400 இடங்கள் என்பது இலக்குதான்.. என்கிற சமாளிப்பு பேச்சுகளும் பாஜக தலைவர்களிடம் இருக்கிறது. அதேநேரத்தில் இந்தியா கூட்டணி 270-290 இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது என சில மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். "இந்தியா" கூட்டணி தலைவர்களும் புதிய ஆட்சி அமையப் போகிறது என இடைவிடாமல் பேசி வருகின்றனர்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications