Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல.. சீனாவுக்கும் கிலி! இந்திய விமானப்படைக்கு கிடைக்கும் அஸ்திரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே உரசல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 12 போர் விமானங்களை இந்த ஆண்டு வழங்க இருப்பதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் கிலியை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

HAL fighter jets Pakistan

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து விமானப்படையில் டாப்பில் இருப்பது இந்தியாதான். நமக்கு அடுத்துதான் ரஷ்யாவே இருக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா விமானப்படையின் பலத்தை உலக நாடுகள் அறிந்துக்கொண்டன. இருப்பினும் பாகிஸ்தானுக்கு பின்னால் சீனா இருப்பதால், நம்முடைய பலத்தை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 12 தேஜாஸ் LCA Mk1A போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களை உருவாக்கி வருகிறது.

இந்நிறுவனத்திடம் ஏற்கெனவே பல ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கொடுக்கப்பட்டிருந்த ஆர்டர்களில் தேஜாஸ் LCA Mk1A விமானங்கள் தயாரித்து முடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் விமானப்படைக்கு கொடுக்கப்படும்.

தேஜாஸ் LCA Mk1A என்பது ரஃபேல் விமானங்களுக்கு இணையானது. சீனாவிடம் 5ம் தலைமுறை விமானங்கள் இருக்கின்றன. தேஜாஸ் LCA Mk1A விமானம் 4.5 தலைமுறையை சேர்ந்ததாகும். இது குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் உள்ள இலக்கை துல்லியமாக குறி பார்க்கவும், நேருக்கு நேர் சண்டையை சமாளிக்கும் வகையிலும் இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் அமெரிக்காவின் GE F404-INI எனும் ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மணிக்கு 2,200 கி.மீ வேகத்தில் இந்த விமானம் பறக்கும். இதில் Astra BVR, Python-5, கைட்ரன் லேசர் கைடட் போன்ற குண்டுகளை கொண்டு செல்ல முடியும். இதில் ஏசா EL/M-2052 AESA எனும் ரேடார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இஸ்ரேல் தொழில்நுட்பமாகும். இதை வைத்து 150 கி.மீ தொலைவுக்குள் விமானத்தை நெருங்கும் மற்றொரு போர் விமானம், ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக கண்டுபிடித்துவிட முடியும்.

தற்போது சீனா வைத்திருக்கும் J-20 எனும் 5ம் தலைமுறை விமானங்களை சமாளிக்க இந்த விமானங்களை பயன்படுத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது. ஏறத்தாழ அனைத்து வகையிலும் சீன விமானங்கள் நமது விமானங்களை விட மேம்பட்டதுதான். ஆனால் சீன விமானத்தின் என்ஜின் செயல்திறன் நம்பும்படி நிரூபிக்கப்படவில்லை. மட்டுமல்லாது J-20 விமானம் கொஞ்சம் காஸ்ட்லியானது. இதனை மெயின்டெயின் செய்யவும் அதிக செலவு செய்ய வேண்டும்.

அப்படி பார்த்தால் நம்முடைய விமானம்தான் கெத்து. குறைந்த செலவில் அதிக திறன்களை நமது விமானங்கள் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+