அடேங்கப்பா.. கிழக்கு லடாக்கில் 19 ஆயிரம் அடி உயரத்தில் புதிய சாலை.. சூப்பர் சாதனை படைத்த இந்தியா
டெல்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சுமார் 19,300 அடி உயரத்தில் இந்தியா புதிய சாலையை அமைத்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் சாலையைக் கொண்ட நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் உம்லிங்லா பாஸ் என்ற இடத்தில் சுமார் 19,300 அடி உயரத்தில் இந்திய எல்லை சாலைகள் நிறுவனம் புதிய சாலையை அமைத்துள்ளது. 52 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புதிய சாலை லே பகுதியின் Chisumle மற்றும் Demchok பகுதிகளை இணைக்கிறது.

இது எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்பைவிட அதிக உயரத்தில் அமைந்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம் நேபாளத்தில் 17,598 அடி உயரத்தில் உள்ளது. இதைவிட இந்த சாலை உயரமான இடத்தில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த சாலை உம்லிங்லா பகுதியில் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தவும் லடாக் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும். கடுமையான வானிலைக்கு மத்தியிலும் இந்திய எல்லை சாலைகள் நிறுவனம் இந்த புதிய சாலையை அமைத்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பகுதியில் குளிர் காலத்தில் வெப்பம் மைனஸ் 40 டிகிரிக்கு கீழ் சென்றுவிடும். அப்படிப்பட்ட சவாலான சூழலில் தான் இந்திய எல்லை சாலைகள் நிறுவனம் இந்த சாலையை அமைத்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் சாலையைக் கொண்ட நாடு என்ற சாதனையை இந்தியா பெற்றுள்ளது.

முன்னதாக பொலிவியா நாட்டின் உடுருஞ்சு எரிமலை அருகே 18,953 அடி உயரத்தில் அமைந்திருந்த சாலை தான் உலகின் உயரமான சாலை என்ற சிறப்பை பெற்றிருந்தது. இப்போது இந்தியா எல்லை சாலைகள் நிறுவனம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications