"ஈரான் vs இஸ்ரேல்.." நொடிக்கு நொடி பதற்றம்! அங்குள்ள இந்தியர்கள் நிலை என்ன- மத்திய அரசு சொல்வது என்ன
டெல்லி: இஸ்ரேல் மீது இரவோடு இரவாக ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக இந்தியாவும் இப்போது முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில காலமாகவே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த பதற்றம்: இது ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது ஈரான் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் என்பதால் உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியா: இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சரமாரி தாக்குதல் குறித்து இந்தியாவும் இப்போது கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே ஏற்படும் மோதல் அப்பகுதியில் நிலவும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பகை அதிகரித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.. உடனடியாக தீவிரத்தைக் குறைக்கவும், அங்குக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையில் இருந்து பின்வாங்கவும் அழைப்பு விடுக்கிறோம். தூதரக ரீதியான பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்பவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இந்தியர்கள் நிலை: பிராந்தியத்தில் உள்ள எங்கள் தூதரகங்கள் அங்குள்ள இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவது இன்றியமையாத ஒன்றாகும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஈரான் நடத்திய இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போராக வெடித்தால் அப்பகுதியில் அமைதி முற்றிலும் சீர்குலையும் என்பதே உலக நாடுகளின் அச்சமாக இருக்கிறது.
என்ன காரணம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நேரடியாக இஸ்ரேலிய எல்லையை நோக்கி ஏவியதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலில் இரண்டு தளபதிகள் உட்பட சிலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இருப்பினும், ஈரான் தூதரகம் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்குக் கடுமையான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்தே வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பான இஸ்ரேல் பாதுகாப்புப் படை மேலும் கூறுகையில், "ஈரான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எங்கள் படைகள் இடை மறித்துவிட்டன. இருப்பினும், அதையும் தாண்டி தெற்கு இஸ்ரேலில் சில ஏவுகணைகள் தாக்கி உள்ளன. இதனால் உள்கட்டமைப்புக்குச் சிறிய சேதம் ஏற்பட்டது" என்றார்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்கா எப்போதும் துனை நிற்கும் என்றும் ஈரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குவோம் என்றும் கூறியுள்ளது.
-
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!










Click it and Unblock the Notifications