டிரம்ப்பை விட்டு தள்ளுங்க.. இந்தியா கனடா உறவு.. மத்திய அரசு மிக முக்கிய முடிவு!
டெல்லி: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த மோதல் இப்போது மெல்லச் சீராகி வருகிறது. இதற்கிடையே இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தப் புதிய ரோட் மேப்பிற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது கனடா வாழ் இந்தியர்களுக்கு நல்ல ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
கனடாவில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து அதிக இந்தியர்கள் கனடாவுக்குச் செல்கிறார்கள். மேலும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அங்குக் கணிசமாக உள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கனடா இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.

இந்தியா கனடா உறவு
அந்த மோதல் இப்போது தான் சீராகி வருகிறது. கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். இதற்கிடையே கனடா இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தப் புதிய ரோட் மேப்பிற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. டெல்லியில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதைத் தொடர்ந்தே இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, "அமைச்சர் ஆனந்த்தின் வருகை இந்தியா- கனடா இருதரப்பு உறவுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனிதா ஆனந்த்
கடந்த மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற அனிதா ஆனந்த், அதன் பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. அனிதா ஆனந்த்துடன் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, தனது கனடா பயணத்தை நினைவுகூர்ந்தார்.
பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக அப்போதே நமது பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது. வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்த ஒத்துழைப்பு தேவை என்பதைப் பிரதமர் எடுத்துரைத்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அனிதா ஆனந்த் பயணம் அமைந்துள்ளது.
பின்னணி
இந்தியா கனடா இடையே முன்பு நல்லுறவே இருந்து வந்தது. 2023ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்த செயலே இரு தரப்பு உறவு பாதிக்கப்பட முக்கிய காரணமாக இருந்தது. அதாவது கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் கொல்லப்பட்டார். 2023 ஜூன் 18ம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருநானக் குருத்வாராவின் முன்பு மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் எதாவது ஆதாரம் இருந்தால் சமர்ப்பித்தால் விசாரணையில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக இந்தியா கூறியது. இருப்பினும், கடைசி வரை ஒரு ஆதாரத்தை கூட ஜஸ்டின் ட்ரூடோவால் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாகவே இந்தியா கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஏன் முக்கியம்
இதற்கு நடுவே ஜஸ்டின் ட்ரூடோ அரசின் மீது உள்நாட்டிலேயே அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த தேர்தலில் மார்க் கார்னி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகே இந்தியா கனடா உறவு மெல்லச் சீராகி வருகிறது. இரு தரப்பு உறவைச் சீர் செய்யும் முக்கிய நடவடிக்கையாகவே அனிதா ஆனந்த்தின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
முன்பே குறிப்பிட்டது போல கனடாவில் இந்தியர்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் இந்தியா கனடா உறவு சீராவது ரொம்பவே முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!












Click it and Unblock the Notifications