வீட்டிற்கே வரும் அதிகாரிகள்.. இந்த 33 கேள்விகளுக்கும் பதிலை ரெடியா வைச்சு இருங்க.. ரொம்ப முக்கியம்
டெல்லி: 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்பட்டும் 33 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள்களை மத்திய அரசு வெளியிட்டது. மொத்தம் இரு கட்டங்களாக இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதில் முதலாம் கட்டத்தில் மக்களிடையே கேட்கும் கேள்விகள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடைசியாக நமது நாட்டில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால் 2021ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும், பல்வேறு காரணங்களால் இது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தச் சூழலில் தான் நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2025 ஜூலை மாதம் இது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. மொத்தம் இரண்டு கட்டங்களாக இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் 2027 மார்ச் 1ம் தேதிக்குள் இந்தப் பணிகள் முழுமையாக முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
கேள்விகள் என்ன
இதில் வீடுகள் பட்டியலிடுதல் என்ற முதற்கட்ட சர்வே வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இது வீடுகள் மற்றும் வசிப்பிடங்கள் தொடர்பானவையாகும். இதற்கிடையே இந்த சர்வேயில் கேட்கப்படும் கேள்விகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இணையச் சேவை, செல்போன் எண்கள், உணவு தானியம் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களான லேப்டாப், ஸ்மார்ட்போன்கள் குறித்த புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2011 கணக்கெடுப்பில் இடம்பெற்றிருந்த வங்கிச் சேவை தொடர்பான கேள்வி இம்முறை நீக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பதிவாளர் ஜெனரல் மிருதுஞ்செய் குமார் நாராயண் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி முதற்கட்ட சர்வேயில் வீட்டின் உரிமை, பயன்பாடு, தற்போதைய நிலை, பொருட்களின் விவரங்கள் மற்றும் சமையல் எரிவாயு (LPG), குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகள் குறித்த கேள்விகள் இடம் பெற்றள்ளது. வீடுகளின் கட்டுமானப் பொருட்கள், அங்குள்ள வசதிகள், வீட்டுத் தலைவரின் பாலினம் எனப் பல்வேறு கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசு நோட்டிபிகேஷன்
இது குறித்து மத்திய அரசு நோட்டிபிகேஷனில், "2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, கணக்கெடுப்பு விவரங்களைச் சேகரிப்பதற்கான படிவத்தில் உள்ள அனைத்துக் கேள்விகளையும், அங்குள்ள மக்களிடம் அதிகாரிகள் கேட்டுப் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமான 'மக்கள் தொகை கணக்கெடுப்பு' 2027 பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும். இதில் மக்கள்தொகை, சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார விவரங்கள் சேகரிக்கப்படும். இந்தக் கட்டத்தில் சாதி விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதில் வீட்டின் தலைவரின் பெயர், பாலினம், சாதி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். வீடுகள் பட்டியலிடும் பணி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக, சுயமாகப் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படும்.
தள்ளிப்போன சர்வே
இந்தக் கணக்கெடுப்பு முதலில் 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் தாமதமான நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு ஒப்புதல் அளித்தது.
ஒட்டுமொத்தத் தகவல்களையும் சேகரிக்க 2027 மார்ச் 1ம் தேதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, கணக்கெடுப்பின் முடிவுகளைத் தொகுத்து வெளியிடுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் எனச் சொல்லப்படுகிறது.
1- 10 கேள்விகள்
கட்டிட எண், மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், வீட்டின் தரை (கான்கரீட்/ மண் தரை போல), வீட்டு சுவர்களின் முக்கிய பொருள் (கான்கரீட்/ மண் சுவர் போல), கூரையின் முக்கிய பொருள், வீட்டை எதற்குப் பயன்படுத்துகிறார்கள், வீட்டின் நிலை என்ன, வீட்டு எண், எத்தனை நபர்கள் வசிக்கிறார்கள், வீட்டுத் தலைவரின் பெயர் ஆகியவை முதல் 10 கேள்விகளாகும்.
11- 20 கேள்விகள்
வீட்டுத் தலைவரின் பாலினம், வீட்டு தலைவர் SC/ST/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவரா?, வீட்டின் உரிமை நிலை, வீட்டில் உள்ளவர்கள் எத்தனை ரூம்களை பயன்படுத்துகிறார்கள், வீட்டில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, குடிநீரின் முக்கிய ஆதாரம், குடிநீர் ஆதாரம் உள்ளதா?, வீட்டில் உபயோகிக்கப்படும் விளக்குகள் (மின் விளக்கு போல), கழிப்பறை உள்ளதா, என்ன மாதிரியான கழிப்பறை உள்ளது ஆகியவை 11- 20 கேள்விகள்
21- 33 கேள்விகள்
கழிவு நீர் வெளியேற்ற அமைப்பு இருக்கிறதா?, குளியலறை உள்ளதா, சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் ஆகியவை குறித்து கேட்கப்படுகிறது. மேலும் ரேடியோ/டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணைய வசதி, லேப்டாப்கள், செல்போன், டூவீலர், கார்/ஜீப்/வேன் ஆகியவை உள்ளதா என்பது 25 முதல் 31 வரையிலான கேள்விகளாகும்.
வீட்டில் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் முக்கிய தானியங்கள் எவை, செல்போன் நம்பர் ஆகியவை கடைசி இரு கேள்விகளாகும்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு!












Click it and Unblock the Notifications