இந்தியா சீனா மிகப்பெரிய முடிவு.. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வோருக்கு சூப்பர் குட்நியூஸ்
டெல்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு நேரடியான விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது என இந்தியாவும் சீனாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சிவனை கைலாய மலையில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் மிகப்பெரிய நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் ஒருமுறையாவது கைலாயம் போக வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், எளிதாக விமானத்தில் சென்று சிவபெருமானை இனி தரிசிக்க முடியும்.
சிவபெருமானை தினமும் வணங்கும் பல லட்சம் பக்தர்கள் வாழ்நாள் விருப்பம் என்றால், கைலாய மலை என்று போற்றப்படும், ஈசன் வாழ்வாதாக நம்பப்படும் இமயலைக்கு கைலாயத்திற்கு யாத்திரை சென்று வந்திட வேண்டும் என்ற ஆசை இருக்கும். 'ஈசன் அருள் இருந்தால் மட்டுமே அங்கு போக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அங்கு நடைபயண யாத்திரை என்பதுமிகவும் சவாலானது ஆகும். பனி லிங்கமாக காட்சியாளிக்கும் சிவனை தரிசிக்க கடும் விரதம் இருந்து பக்தர்கள் பயணிப்பார்கள்.

இந்நிலையில் விமானத்தில் சென்றும் பக்தர்கள் சிவபெருமானை தரிசிக்க முடியும். இதுவரை விமானத்தில் செல்ல இருந்த தடை விலக்கப்படுகிறது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ரேடியான விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது என இந்தியாவும் சீனாவுக்கும் இடையேயான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் கோடைகாலத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி விமானப்பயணத்திற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனா சென்றுள்ளார். இன்று இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வெளியுறவுச் செயலாளர்-துணை வெளியுறவுச் செயலாளர் இடையே சந்திப்பு பெய்ஜிங்கில் நடந்தது. அப்போது தான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ரேடியான விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் கசானில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடந்திருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இரு தரப்பினரும் இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பாய்வு செய்து, உறவுகளை மேம்படுத்தவும், சில மக்கள் சார்ந்த சுமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டிருந்தனர். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கைலாஷ் மானசரோவருக்கு நேபாளத்தின் கஞ்சில் இருந்து போக முடியும். இந்தியாவின் லக்னோவிலிருந்து வடகிழக்கே 200 கிமீ தொலைவில் உள்ள நேபாள நாட்டின் கஞ்சில் இருந்து போக முடியும். 1951 ஆம் ஆண்டிலிருந்து சீன அரசு கையிலா மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரை செல்ல அனுமதி அளித்து வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications