டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதைத்தான் செய்ய போகிறோம்.. ரஷ்யாவிற்கு இந்தியா தந்த "ஸ்பெஷல் அப்டேட்".. சீனாவிற்கு எதிராக வியூகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் இந்தியாவிற்கு இருக்கும் பிரச்சனை குறித்தும், எல்லையில் நீடிக்கும் பதற்றம் குறித்தும் இந்தியா ரஷ்யாவிற்கு விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    China எல்லைக்கு Fire & Fury படையை அனுப்பும் இந்தியா

    இந்தியா - சீன எல்லை பிரச்சனை உலகம் முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறது. லடாக்கை உலக நாடுகள் எல்லாம் தீவிரமாக கவனித்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்த எல்லை பிரச்சனையை அமெரிக்கா தீவிரமாக கவனித்து வருகிறது.

    முக்கியமாக சீனா லடாக் எல்லைக்கு அருகே போர் விமானங்கள் மூலம் ரோந்து பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் நவீன ஆயுதங்களை தங்கள் எல்லையில் குவித்து வருகிறது.

    செம திருப்பம்.. லடாக் எல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்.. பின்னணி என்ன?செம திருப்பம்.. லடாக் எல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்.. பின்னணி என்ன?

    டிரம்ப் பேச்சு

    டிரம்ப் பேச்சு

    இந்த நிலையில் இந்தியா சீனா பிரச்சனை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடி உடன் ஆலோசனை செய்தார். இரண்டு நாட்கள் முன் பிரதமர் மோடிக்கு போன் செய்த அதிபர் டிரம்ப் சீனா குறித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது . இதில் சீனாவை எப்படி சமாளிப்பது, பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது தொடர்பாக இரண்டு நாட்டு தலைவர்களும் விவாதம் செய்தனர். இது மிகவும் முக்கியமான ஆலோசனையாக பார்க்கப்படுகிறது.

    போன் கால்

    போன் கால்

    இந்த நிலையில் இந்த போன் கால் முடிந்த உடன் ரஷ்யாவிற்கு இது தொடர்பாக இந்திய சிறப்பு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தான் ரஷ்யாவின் இந்திய தூதுவர் நிகோலாய் கூடசேவ்விடம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இந்தியா சீனா இடையே என்ன பிரச்சனை, நிலைமை எப்படி உள்ளது என்று விளக்கி உள்ளார்.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    பொதுவாக இரண்டு நாட்டு பிரச்சனையை இந்தியா தானாக வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்காது. அமெரிக்காவை கூட இந்த பிரச்சனையில் இந்தியா மத்தியசம் பேச அனுமதிக்கவில்லை. இந்த சீனா பிரச்சனையில் இந்தியா இப்படி உறுதியாக உள்ளது. இது இரண்டு நாட்டு பிரச்சனை. நீங்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துவிட்டது.

    ஸ்பெஷல் அப்டேட்

    ஸ்பெஷல் அப்டேட்

    ஆனால் ரஷ்யாவிற்கு மட்டும் இந்தியா இப்படி ஸ்பெஷல் அப்டேட் கொடுத்துள்ளது. சீனாவிற்கு ஆதரவாக ரஷ்யா இருக்கிறது. போர் என்று வந்தால் ரஷ்யா சீனா பக்கம் சாய வாய்ப்புள்ளது. இது இந்தியாவிற்கு சிக்கலாக முடியும். இதை தடுக்கும் வகையில் இப்போது இந்தியா அப்டேட் கொடுத்துள்ளது . இதனால் மொத்தமாக சீனாவை தனிமைப்படுத்தும் வகையில் இந்தியா இப்படி செய்கிறது என்று கூறுகிறார்கள்.

    இனி எல்லை பிரச்சனை

    இனி எல்லை பிரச்சனை

    அதேபோல் இந்தியா இனி எல்லை பிரச்சனையில் என்ன செய்ய போகிறோம் என்பதையும் ரஷ்யாவிற்கு விளக்கி உள்ளது. சீனாவிற்கு எதிரான வியூகமாக இது பார்க்கப்படுகிறது. சீனா உடன் பிரச்சனை தொடர்ந்தால் இந்தியா இன்னும் பல நாடுகளுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் என்று கூறுகிறார்கள். இன்னும் பல நாடுகள் உடன் இந்தியா தனது நட்பை விரிவுபடுத்தும். இது மிக சிறந்த ராஜாங்க நடவடிக்கை என்று கூறுகிறார்கள்.

    English summary
    India - China Standoff: India gives special update to Russia on the situation after the phone call with Trump .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X