இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை- படைகுறைப்பு குறித்து முடிவு வருமா?
டெல்லி: இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலாவது எல்லைகளில் படைகுறைப்பு தொடர்பான முடிவு எட்டப்படுமா? என்பது எதிர்பார்ப்பு.
கால்வன் பள்ளத்தாக்கில் சீனா கடந்த ஆண்டு மே மாதம் ஊடுருவ முயன்றது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் இருநாடுகளிடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டின் ராணுவம், வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று 9-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சூசுல் செக்டாருக்கு எதிரே உள்ள மால்டோ பகுதியில் இருநாட்டு ராணுவ தளபதிகள் இடையே இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
எல்லையில் சீனா ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்காத வரையில் இந்தியாவும் படை குறைப்பை மேற்கொள்ளாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் 9-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications