இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. தொடர்ந்து 3ஆவது நாளாக ஏறுமுகத்தில் கேஸ்கள்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தொடர்ந்து 3ஆவது நாளாக பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சொல்லப்படும் சீனாவை காட்டிலும் இந்தியாவில் நோய் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,10,461 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் 3-ஆவது நாளாக கொரோனா தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்று மாலை பல்வேறு மாநிலங்கள் 5000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பை கண்டது. இதுவரை 54.13 சதவீதம் பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நேற்று 3,874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த மாநிலத்தில் இதுவரை 1,28,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,984 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் நேற்று ஒரே நாளில் 3,630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு மொத்தம் கேஸ்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. இறப்பு எண்ணிக்கை 2,112 ஆகும்.
டெல்லியில் 2ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 3000-த்தை தாண்டியது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் ஒரே நாளில் 3,137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. அது போல் இறப்பு எண்ணிக்கையில் இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 306 பேர் கொரோனாவால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,254 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,10,461 ஆக உயர்ந்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications