இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு

இந்தியாவில் தொற்று அதிகரித்து செல்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு குறைந்து கொண்டு வந்த நிலையில் தற்போது அது 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த பாதிப்பு தற்போது ஒரு நாளைக்கு 50,000 என்ற அளவை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது. திருவிழாக் காலம் என்பதால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குளிர்காலம், மழைக்காலம் வேறு வந்து விட்டதால் பாதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

India covid numbers cross 80 lakhs, and New Cases Up By 14 Per Cent In A Day

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் புதிதாக 49,881 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன... மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்து 80,40,203 ஆக உள்ளது.. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

கேரளாவில்தான் அதிக அளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது... அங்கு 8790 என்ற அளவில் உள்ளது. இதற்கடுத்து மகாராஷ்டிராவில் 6738, டெல்லி 5673, மேற்கு வங்கம் 3924, கர்நாடகாவில் 3146 என்ற அளவில் உள்ளன.

டெல்லியில் அதிக அளவிலான பாதிப்புகள் வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்... இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 1.2 லட்சமாக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது. 6 லட்சம் பேர் இப்போதைக்கு சிகிச்சையில் இருக்கிறார்கள்.

உலக அளவில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2-வது நாடு இந்தியா என்றாலும்கூட பலி எண்ணிக்கையில் இந்தியா ரொம்பவே நல்ல நிலையில் உள்ளது... உலக அளவில் இந்தியாவில்தான் பலி எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+