நான்கே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது
டெல்லி: இந்தியாவில் நான்கே நாளில் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6.36 லட்சமாக உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,05,637 என்கிறது https://www.covid19india.org புள்ளி விவரம். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,36,602 ஆகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 25,069.
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 2,84,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 1,58,140 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,194 பேர் மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,369. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,236. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416.
டெல்லியில் 1,18,645, கர்நாடகாவில் 51,422, குஜராத்தில் 45,567, உ.பி.யில் 43,441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,8876. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 24915. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 612815.
இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 35 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு நாளில் உயிரிழப்பும் 600ஐ தாண்டியது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications